சோழ மன்னர்கள் வன்னிய வம்சத்தவர் என்பதற்க்கு இதுவே சிறந்த சான்று. தங்களை சோழர் வழிவந்தோர் என்று யார் வேண்டும் என்றாலும் கூறி கொள்ளலாம். ஆனால் நடைமுறை ஆதாரம் வேண்டும். உண்மையான சோழர் குல வாரிசுகள் உயிரோடு இருக்க...மாற்று குலத்தார் தங்களை சோழர் என்று அழைத்து கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.
சோழர்களின் குல தெய்வமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் சோழ மண்டக படி உற்சவத்தை நடத்தும் உரிமையை பெற்றவர்கள் வன்னியக்குலத்தவரான பிச்சாவரம் சோழனார் மட்டுமே. வேறு எந்த சாதியினருக்கும் இந்த உரிமை இல்லை.
சோழர்கள் மட்டுமே முடி சூட்டப்படும் சோழர்களின் குல தெய்வமான தில்லை நடராஜர் ஆலயத்தில் தில்லை வாழ் அந்தணர்இம்மரபினருக்கு முடிசூட்டுவார்.அவ்வாறு பிச்சாவரம் மன்னர் மஹாராஜா ராஜா ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார்அவர்கள் சோழராக முடி சூட்டப்பட்டு.. புலி கொடி கொடுத்து சோழராக பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு தில்லை அந்தணர்களுடணும் பொது மக்களுடணும் காட்சி தரும் அரிய புகைப்படம்.
மஹாராஜா ராஜா ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார்
மஹாராஜா ராஜா ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார்
வன்னிய குல சோழ மன்னர்களுக்கு முடி சூட்டும் பொது எடுத்த புகைப்படங்கள்