Tuesday, November 6, 2012

பாதி சிதம்பரத்தையே அடைத்து கொண்டிருக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் எப்படி வந்தது தெரியுமா ?




சிதம்பரத்தில் பாதி நிலம் பிச்சாவரம் மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் குடும்பத்திற்கு சொந்தமாக இருந்தது . செட்டியார் நடத்தும் அந்த அண்ணாமலை பல்கலைகழகம் நிலம் கூட இந்த சோழனார் குடும்பத்திடம் தான் இருந்தது .

இவரின் மூதாதையர் ஒரு திருமணத்திற்க்காக முகையூர் சுப்ரமணிய பிள்ளையிடம் அறுபதாயிரம் ரூபாய் கடன் வாங்கினார்கள் .அந்த பணத்தை திருப்பி தர இயலாத நிலைமை வந்ததால் நிலத்தை ஏலமிடும் நிலைமைக்கு வந்தார்கள் . அப்போது ராமநாதபுரம் கானாடுகாத்தானை சேர்ந்த அண்ணாமலை செட்டியார் அவர்கள் அந்த நிலத்தை ஏலம் எடுத்தார் .அந்த நிலம்தான் இன்று அண்ணாமலை பல்கலைகழகம் .

---- நக்கீரன்

Monday, November 5, 2012

மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் , சோழ அரசராக தில்லை நடராஜர் கோவிலில் முடிசூட்ட பெற்ற 34-ஆம் ஆட்சி ஆண்டில் (2012) அவரை வாழ்த்திய செய்தி மாலைமலரில் (05-11-2012)

மகா ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார் , சோழ அரசராக தில்லை நடராஜர் கோவிலில் முடிசூட்ட பெற்ற 34-ஆம் ஆட்சி ஆண்டில் (2012) அவரை வாழ்த்திய செய்தி மாலைமலரில் (05-11-2012) .........................

 "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் "


=============



Sunday, November 4, 2012

களப ராஜராஜன் என்றுள்ள கல்வெட்டு சாளுக்கிய சோழனது . நேரடி சோழனது அல்ல



“ களப ராஜராஜன்”

“ கள்வன் ராஜராஜன்”

என மெய்க்கீர்த்தி கல்வெட்டு "இராண்டாம் இராசராச சோழனை" களபர்-கள்வன் எனவும் குறிப்பிடுவதால் , "முதலாம் ராஜ ராஜனும் " கள்ளர் சமூகமாக இருக்கலாம் என்று கள்ளர் சமூக நண்பர்கள் கூறுவதால் , அது மிகப்பெரும் பிழை என்று சொல்கிறேன் .

இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை “களப ராஜராஜன்” என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை”கள்வன் ராஜ ராஜன்” என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள “களப” என்ற வார்த்தை “களவ” என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல். ) என்பது கள்ளர் சமூகத்தார் வாதம் .

இது மட்டமான ஆதாரம் .

காரணம் , இந்த வார்த்தை உள்ள மெய்க்கீர்த்தி "இராண்டாம் இராசராச சோழனை" சொல்வது . அவன் முதலாம் ராஜ ராஜன் அல்ல .
அதோடு இந்த மெய்க்கீர்த்தி இரண்டாம் இராசராச சோழனால் வெளி இடப்பட்டது , இந்த இரண்டாம் ராஜா ராஜன் யார் தெரியுமா ?

இரண்டாம் இராஜராஜ சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனாவான்.இங்கு முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்தே சாளுக்கிய மரபு கொண்டவர்கள் சோழர்கள் ... ஆகையினால் இவன்  சாளுக்கிய சோழன் ...

ஆகவே இது மட்டமான ஆதாரம் .

அதுமட்டுமில்லை களப என்பதற்கு பல பொருள் உண்டு .  களப என்றால் கலவை , யானை போன்ற பல பொருள் உண்டு .

எடுத்துக்காட்டு :

1. களப மாட வீதி - யானை செல்லும் வீதி என்றும் கூறலாம்.       

2. களப மாட வீதியும் - சுண்ணம் பூசப்பெற்ற, மாளிகைகளை உடைய       வீதியையும்

Refer:  http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=73&pno=7

3. களப வன முலைப் பொறை சுமந்து உருகி இறந்ததோ -சந்தனக்குழம்பணிந்த அழகிய முலைகளின் பாரத்தைச்
சுமந்து உருகி இற்றுப்போயிற்றோ

Refer : http://www.tamilvu.org/slet/l3100/l3100pd2.jsp?bookid=63&pno=64

4. பரிமள களப சுகந்த -- நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின் வாசனை வீசும்

Refer : http://www.kaumaram.com/thiru_uni/tpun0078.html

இதுபோன்ற பல பொருள்  உண்டு .

ஆகவே இம்மன்னன் யானையை போன்ற பலம்  பொருந்திய மன்னன் என்று புகழ  “ களப ராஜராஜன்” என்று பாராட்ட பெற்றிருக்கலாம் .

 சாளுக்கிய மரபுடைய இந்த சோழனை "களப " என்பது என்று கூறுவது அவன் களம் கண்டவன் என்பதனாலோ, அல்லது யானையை போன்ற பலம்  பொருந்திய மன்னன் என்பதாலோ ,அல்லது சோழ மற்றும் சாளுக்கிய குலத்து கலப்பில் வந்த மன்னன் என்பதாலோ என்று பல பொருள்கள் இதில் அடங்கும் .அந்த கல்வெட்டின் முழு வாக்கியம் படித்தால்தான் அதன் முழு செய்தி நமக்கு கிடைக்கும் .

“ கள்வன் ராஜராஜன்” என்றாலும் இங்கே ஒரு குறிப்பிட்ட சாதியை சொல்ல இயலாது . கள்வன் என்பது திருடனை குறிப்பது . ஒருதன் நாட்டு மக்களை காக்கும் ஒரு  மன்னனை அப்படி கூற காரணம் , அவன் மக்களின் உள்ளம் கவர்ந்த கள்வன் என்பதனால் கூட இருக்கலாம் .

அடுத்து முத்தரையர்களில் குறிப்பிடத்தக்கவன் பெரும்பிடுகு முத்தரையன்(கி.பி. 655 – 680) என்பவன் ஆவான். இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ஸ்ரீ கள்வர கள்வன் என்பதாகும். இதனைச் செந்தலை மற்றும் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே கள்வர கள்வர் எனப்படும் முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே எனலாம்

Refer: http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312112.htm

ஆக முத்தரையர் மன்னருக்கும் இந்த கள்வர் பட்டம் உண்டு . அதோடு முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே என்று சொல்வதாலும், இவர்கள் கன்னட நாட்டவர் என்பதாலும் , இதே போல இரண்டாம் ராஜ ராஜனும் சாளுக்கிய (கன்னடர் ) பகுதியில் இருந்து வந்தமையால் அதே கள்வர் என்னும் வார்த்தையை உபயோகித்திருக்கலாம் அல்லவா .........

அதோடு  சாளுக்கிய மரபுக்கும் கள்ளர் சாதிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

சாளுக்கிய மரபு கொண்ட முதலாம் குலோத்துங்க சோழனே பூணூல் அணிந்தவன் . இதை அப்போது எழுதிய களிங்கத்துபரணியும் உறுதிபடுத்துகிறது .

பேரனாகிய குலோத்துங்கனைக் கங்கைகொண்ட சோழன் தேவி, தன்
மலர்க்கையால் எடுத்து,

'அவனிபர்க்குப் புரந்தரனாம் அடையாளம்
அவயவத்தின் அடைவே நோக்கி
இவன் எமக்கு மகனாகி இரவிகுலம்
பாரிக்கத் தகுவன் என்றே'


கூறினாளாக ஆசி்ரியர் கூறுகின்றார்.

இவன் பூணூல் அணிந்தானாகவும், வடமொழி மறை பயின்றானாகவும்,
ஆசிரியர் கூறுகின்றார். இதனால் அக்காலத்திய தஞ்சைச்சோழர் தம்மை
வடநாட்டுச் சத்தி்யரின் கால்வழியில் வந்தாராகவே கொண்டு, வடநாட்டுச்
சத்திரியருக்குரிய ஒழுக்கத்தைக் கைக்கொண்டும் வந்தாராதல் தெரிகின்றது.
ஆசிரியர் சயங்கொண்டாரும் சோழர் மரபு வரலாறு கூறுமிடத்துச்
சோழர்களின் முன்னோராக வடநாட்டுச் சத்திரியர்
 பலரைக் கூறுவதும் 
ஈண்டு நோக்கத்தக்கது. 

இவரை அடுத்துச் சோழர் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த ஒட்டக்கூத்தரும் தாம் பாடிய மூவர் உலாவிலும், சோழ மரபு கூறுமிடத்தும் இங்ஙனமே சோழரின் முன்னோராக வடநாட்டுச்சத்திரியர் பலரைக் கூறுவதும் கருததக்கது. '...
----------------------- கலிங்கத்துப்பரணி

Reference: http://www.tamilvu.org/library/l5920/html/l5920p12.htm



கள்ளர்கள் பூணூலும் அணிவதில்லை .. ஆனால் இந்த வழக்கம் வன்னியரில் உண்டு .'

இந்த கீழை சாளுக்கிய மரபு கூட வன்னியருக்கும் உறவாக உள்ளது .. அதாவது வன்னியர் பிறப்பை பற்றி சொல்லும் நூல்களுள் அனைத்தும் அக்னியில் இருந்து பிறந்தவர் என்று கூற , கல்லாடம் மட்டும் பன்னிரண்டு பன்றிகளிலிருந்து வன்னியர் தோன்றினரெனக் கூறுகிறது .
அதாவது சாளுக்கியர் கீழ் குறுநில மன்னராக இருந்துள்ளனர் என்பது இதன் அர்த்தம் .அது மட்டுமல்லாது வன்னியர்களுக்கு சாளுக்கியர் என்ற பட்டமும் உண்டு .

அடுத்து தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் (மூன்று தொகுதிகள்) - (முனைவர் பா.சுப்பிரமணியன் 1989 பதிப்பாசிரியர்) (வெளியீடு : தஞ்சாவூர் பல்கலைக் கழகம்) என்ற பகுதியில் இடங்கை வலங்கை சாதியை பற்றி குறிப்பிடும் போது ,

வலங்கைச் சாதியினராக (1) ரெட்டிவடுகர் (2) கமல வடுகர் (3) துளுவ வடுகர் (4) துளுவச் செட்டி (5) வெள்ளாளச் செட்டி (6) குத்திக் கொல்லர் (7) நங்காரி வடுகர் (8) சேணயர் (9) சலுப்பன் (10) இடையர் (11) சாலியர் (12) கோமுட்டி (13) உப்பிலியன் (14) சாணான் (15) சுண்ணாம்புக்காரன் (16) மாறாயச் செட்டி (17) மேளகாரன் (18) வலையர் (19) தெலுங்க அம் பட்டன் (20) தமிழ் அம்பட்டன் (21) வண்ணான் (22) வாணியன் என இருபத்திரண்டு சாதியினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இடங்கைச் சாதியினராக (1) மேலசெட்டி (2) கைகோளர் (3) பள்ளி (4) படையாச்சி (5) மறவர் (6) மேளக்காரர் என ஆறு சாதியினர் குறிப்பிடப் பட்டுள்ளனர்.

Reference : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21440:2012-09-27-18-44-18&catid=25:tamilnadu&Itemid=137

தஞ்சை பகுதிகளில் மாரதியர் ஆட்சியின் போது இடங்கை வலங்கை சாதிகள் என்று குறிப்பிட பட்டு இருப்பதில் கள்ளர் என்ற சாதி காணப்படவில்லை . அவர்கள் தஞ்சை குடந்தை பகுதிகளில் இருந்தவர் பற்றி குறிப்பிடும் போது படையாச்சி ,  மறவர் என்ற சாதிகள் இருந்ததாக மட்டுமே கூறுகின்றனர் . தஞ்சை கள்ளர்கள் இங்கே பன்னெடுங்காலமாக வாழ்ந்தார்கள் என்றால் ஏன் அவர்கள் குறிப்பிட படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது .


நன்றி : இந்த களப என்னும் கல்வெட்டு குறிப்பை பற்றி செய்தி எனக்கு கிடைக்க காரணமாக இருந்த திரு.ராஜேஷ் பிள்ளை அவர்களுக்கு நன்றி 

சோழர் மன்னர்கள் வர்மன் என்ற பெயர் சேர்த்து அழைக்க பட்ட கல்வெட்டுக்கள் :

சோழர் மன்னர்கள் வர்மன் என்ற பெயர் சேர்த்து அழைக்க பட்ட கல்வெட்டுக்கள் :







----நன்றி
சோழர் கரந்தை செப்பேடு தொகுதி
ஆசிரியர்: சி.கோவிந்தராசன்
சி.கோ.தெய்வநாயகம்
மதுரை பல்கலைக்கழகம்

Friday, November 2, 2012

ராஜேந்திர சோழன் காலத்திய கல்வெட்டொன்றில் சோழர் படைத்தளபதியாக இருந்த ஒரு பள்ளி (வன்னியர் ) இனத்தவர்


ராஜேந்திர சோழன் காலத்திய கல்வெட்டொன்றில் சோழர் படைத்தளபதியாக இருந்த ஒரு பள்ளி (வன்னியர் ) இனத்தவர் குறிப்பிடப்படுகிறார்.

"வேசாலி பிரமதேயத்திலிருக்கும் குடிப்பள்ளி பெருமான் இரண்டாயிரவனான ஸேநாபதி ராஜேந்திர சோழ வேசாலிப் பேரரையன்" (ARE 124 of 1902)

இரண்டாயிரவன் என்பதால் இந்த பள்ளி இனத்தவர் இரண்டாயிரம் வீரர்கள் கொண்ட படைப்பிரிவிற்கு தளபதியாக இருந்தார் என்பது தெரிய வருகிறது.

###

நன்றி : தகவலை அளித்த திரு சுவாமி அவர்களுக்கு நன்றி :

Friday, October 26, 2012

சோழ மன்னர்கள் யார்? அண்ணாமலை நகரிலேயே அரங்கேறிய ஓர் ஆதாரம்!








தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் இரண்டாவது கருத்தரங்கு 1995 ஆகஸ்ட் 26, 27இல் அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், ஆம் சிதம்பரத்தில் தில்லை நடராசர் திருக்கோவில் இருக்கும் ஊரில் நடைபெற்றது.

அப்போது அதாவது 1995லேயே தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய புலவர் செ.இராசு சோழமன்னர்கள் யார்? என்றும் தலைப்பில் கட்டுரை ஒன்று வாசித்தார்.
அந்தக் கட்டுரையில் சோழ மன்னர்களின் வாரிசுகள் சோழமன்னர் மரபில் தோன்றிய சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள பிச்சாவாரம் ஜமீன்தார் குடும்பத்தினரே என்று கூறுகிறார்.

அதற்கு முதலில் அவர் காட்டிய ஆதாரம்: 2.7.1939 அன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம், தேப்பெருமாள் நல்லூரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் வரவேற்புரையாற்றிய வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப்பண்டாரத்தார் அவர்கள், சோழ மன்னர் மரபினர் சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள பிச்சாவரம் ஜமீன்தார் குடும்பத்தினரே என்று கூறினார்.




சோழப் பெருமன்னர்களுக்குக் குலதெய்வம் தில்லை நடராசரே என்று முன்னர் குறிப்பிட்டோம். விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தியில் தன்குல நாயகன் தாண்டவம்பயிலும் தில்லையம்பலம் என்று கூறப்படுகிறது.

இன்று உள்ள பிச்சாவரம் ஜமீன் தார்களுடைய குலதெய்வம் நடராசப் பெருமாளே ஆவார். இவ்வாறு சோழ மன்னர்களின் மரபினர் பிச்சாவரம் ஜமீன்தார்களே என்று கூறி புலவர் செ.இராசு காட்டும் ஆதாரம் தஞ்சைச் சோழமன்னர்களின் வாரிசு என்று கூறுவதற்குக் காட்டும் ஆதாரம், தில்லைக் கோயில் உரிமையாளர்கள் யார் என்பதைக் கூறுகிறது.

அண்மைக்காலம்வரை தில்லை நடராசர் கோயில் உரிமை பிச்சாவரம் ஜமீன்தாருக்கே இருந்தது. ஆதலால் தில்லைக் கோயிலின் சாவி நாள் தோறும் ஜமீன்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. அர்த்த சாமப் பூசையின் பின் கோயில் சாவி பல்லக்கில் வைக்கப் பட்டுப் பிச்சாவரம் கொண்டு சென்று அளிக்கப்படும். அதிகாலை மீண்டும் அவ்வாறே வாங்கி வரப்படும்.

நடுநிலையாளர்களே நாட்டோர்களே! பாருங்கள் இந்த உண்மை வெளிச்சத்தை எங்களுக்குத்தான் உரிமை என்று நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறிச் சத்தியவாக்கு என்ற பெயரில் பொய்சத்தியம் செய்து கொடுக்கும் இவர்களின் யோக்கியதையை. தங்களுக்குச் சொந்தக் கோவிலாளால் தினமும் சாவியைக் கொண்டு போய் ஒப்படைத்தது ஏன்? திரும்பவும் போய்த் தினமும் வாங்கி வந்தது ஏன்?

சாவியை எங்கே கொண்டு போய், எவரிடம் கொண்டு போய் ஒப்படைத்திருக்கிறார்கள்? அக்கம்பக்கத்திலே உள்ள அரசு அலுவலகத்தில் எதுவும் ஒப்படைக்க வில்லை. அவர்களில் மூத்த தீட்சிதரிடம் ஒப்படைக்கவில்லை. சிதம்பரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிச்சாவரத்தில் கொண்டு போய்ச் சேர்த்து அங்கிருந்து தினமும் காலை கொணர்ந்திருக்கிறார்கள். இச்செய்தி மறுக்கப்படாமல் நடைபெற்ற செய்தி.

ஆகத் தீட்சிதர்கள் கோயிலைக் காவல் காக்க இரவில் தங்குவது, காவல் காப்பது ஆகியனஎல்லாம் கடந்த நூற்றாண்டின் இடையில் ஏற்பட்ட பழக்கம் என்பது தெரிகிறது.

சிதம்பரம் கோயில் ஆட்சி உரிமையைப் பிச்சாவரம் ஜமீன்தார்கள் பெற்றிருந்ததில்லை மூவாயிரவர்க்குள் ஏற்படும் சிக்கல்களையும், வழக்குகளையும் பிச்சாவரம் ஜமீன்தாரே தீர்த்துவைத்தனர்.

நன்கு கவனிக்கவேண்டும். தீட்சதர்கள் தங்கள் வழக்குகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளாது பிச்சாவரம் ஜமீன்தாரின் தீர்ப்புக்கு விட்டனர் அதாவது பொது தீட்சிதர்கள் என்றும் தீட்சிதர்கள் சபை என்றும் அவர்கள் கொண்டிருக்கிற அமைப்பு சமீப காலங்களில் உருவாகி இருக்கிறது. இந்தப் பொது சபை கூடுவது. பொது சபை வழங்கும் தீர்ப்பு நடாராசர் வழங்கும் தீர்ப்பு என்பதெல்லாம் சமீபகாலங்களில் ஏற்பட்டுள்ளது.

பிச்சாவரம் ஜமீன்தார்கள் சோழர் வாரிசு என்பதால், கோவிலைக் கட்டியவர்கள் சோழ மன்னர்கள் என்பதால், அவர்களுக்கு அடங்கிக் கோயிலில் பூஜை செய்து வந்தவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் 5.11.1911இல் 12 தீட்சிதர்கள், தீட்சிதர்களின் சார்பில் பிச்சாவரம் ஜமீன்தாருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பிச்சாவரம் ஜமீன்தாரை 1 மகாளளஸ்ரீ சக்கரவர்த்தியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளன.

முடிசூட்டு விழா என்பது ஆரிய முறைப்படி நடக்கத் தலைப்பட்ட பின்னர், முடிசூட்டுதலை தீட்சதர்கள் செய்து வந்துள்ளனர்.

வலம்புரிச் சங்கால் பஞ்சாக்கரப் படியில் அமரச் செய்து முடி சூட்டினர் என்பதைப்பின் வரும் பாட்டு உறுதிப்படுத்துகிறது.

அலகில் மற்றெவரும் அணுகுவதற்கு அரிய பற்சக்கரத்திருப்படி மிசை அமர்த்தி
அஞ்சேல் என நடம் ஆடும் இறைவன்முன் வலம்புரிச்சங்கால் கங்கை நீர் பெய்து நலம் பெறத் திருஅபிடேகம் செய்தபின் தேவரும் முனிவரும் திருவுளங்களிய
பூமகள் இங்கு பொன் மணி மண்டபத்து அரியாசனத்தில் அரசனை அமர்த்தி
பரிவுடன் துதித்துப் பரமனை வணங்கி முடிதலை முனிவர் திருக்கரத்து ஏந்திச் சூடினர் வாழ்த்திச் சோழனார் தமக்கே
கோயில் தீட்சிதர்களுக்கு உரிமை யுடையது என்றால் அவர்களுடைய கோயிலில் போய் சோழ மரபினர் என்று கூறப்படுவோர் முடி சூட்டிக் கொள் வார்களா?

பிச்சாவரம் ஜமீன்தார்கள் பட்டா பிஷேகத்தை ஒட்டிப் பட்டாபிஷேகப் பிரகடனம் என்ற பெயரில் வெளியிடும் அறிவிப்பிலே,

ஆதியிலே கௌட தேசாதி பனுடைய மூத்த குமாரனாகிய இரணிய வர்வச் சக்கரவர்த்தி என்னும் காரணப் பெயர் பூண்ட சிம்மவர்மச் சோழனால் பதஞ்சலி, வியாக்கிரபாதர்கள் ஆக்ஞைப் படி தில்லைக் காட்டைத் திருத்தி தேவாலயமாகப் பிரதிஷ்டை செய்யப் பெற்று ஸ்ரீ சிதம்பரம் நடராசப் பெரு மாள் சந்நிதியிலே தில்லை மூவாயிர முனிவர்கள் திருமுன்னே ஸ்ரீபஞ்சாக்கரப் படியின் மீதே மேற்படி சோழ வம்சத்தினருக்குத் தொன்று தொட்டு பட்டாபிஷேகம் நடந்து வந்த சம்பிராதாயப்படி அச்சோழ வம்சவழி வந்த பிச்சாவரம் ஜமீன்தார்.

எனும் அந்தப் பா தொடங்குகிறது முடிவுரையாகப் புலவர் இராசு இவ்வாறு முடிக்கையிலும் சோழருக்கு அன்றி முடி சூடாத்தில்லை மூவாயி ரவர் பிச்சாவரம் ஜமீன்தாருக்கு முடிசூட்டுவதாலும், அப்போது புலிக் கொடி அளித்தலினாலும், வளவன் என்ற பெயர் உள்ளமையாலும், தில்லை நிருவாகம் பெற்றிருந்த காரணத் தாலும் தில்லை நடராசரைக் குல தெய்வமாகக் கொண்ட காரணத் தாலும், தில்லைக் கோயில் சாவியை வைத்திருந்த உரிமையாலும், தில்லை தீட்சிதர்கள் கட்டுப்பட்டிருந்தமை யாலும், சோழனார் என்ற பெயர் பெற்றிருப்பதாலும் பிச்சாவரம் ஜமீன்தார் மரபினரே சோழர் மரபினர் என்பது பெறப் படுகிறது.

விடுதலைக்குப்பின் காங்கிரசு அரசு மய்யத்திலே பதவி ஏற்றபின் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது.

இவ்வாறு ஜமீன் ஒழிப்புச் சட்டமாக நிறை வேறியதும் ஜமீன்தார்கள் தாங்கள் கொண்டிருந்த அரண்மனை, கோயில், நிலம் ஆகியவற்றில் உரிமைகளை இழந்தனர்.

எனவே ஜமீன் ஒழிப்பிற்குப்பின் அதுவரை பிச்சாவரம் ஜமீன்தாரிடத்தில் இருந்த கோயில் உரிமையைப் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்கள் உரிமை கொண்டாடுபவர்கள் உரிமை யாளர்களாக மாறியதுபோல் தீட்சிதர்கள் உரிமை கொண்டாடத் தலைப்பட்டுவிட்டனர்.

அதுவரையில் ஜமீன்தாரிடம் சென்று கோயில் சாவியை ஒப்படைத்து பின் பெற்று வந்தவர்கள் சாவியைக் கொண்டு சென்று கொடுக்காமல் தாங்களே வைத்துக்கொண்டு நிருவாகம் செய்யத் தலைப்பட்டு விட்டனர். இதுதான் உரிமை. எனவே, உரிமை இல்லாததை உரிமை கொண்டாடி வருவது எப்படி சொந்தமாகும்?

நாட்டுடைமை என்பது பல துறைகளிலும் நிறைவேறியதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் கொடுத்ததன் விளைவாகக் கலைஞர் அந்த பேருந்துகளைத் தேசியமயம் எனப்படும் நாட்டுடைமையாக்கியது அதற்கு என்ன அரசியல் நோக்கமா இருந்தது? மக்கள் நலன்தான் முன்னின்றது. அது போலத்தான் நிருவாக அலுவலரை நியமித்துக் கோயில் நிருவாகம் நேர்மையாக வெளிப்படையாக நடைபெறச் செய்வதில் என்ன அரசியல் நோக்கமிருக்கமுடியும்?

தமிழகத்திலுள்ள மற்றைய கோவில் நிருவாகம் அப்படித்தானே நடை பெறுகிறது? இத்தகு நடவடிக்கைக்கு அர்த்தம் பொருள், உள்நோக்கம் கற்பிக்கலாமா? அர்ச்சகர்களான தில்லைத் தீட்சிதர்களுக்கும் தமிழக அரசுக்கும் இதுவரை பகையோ, மோதலோ ஏற்பட்டதும் கிடையாது. இதுபோல் மய்யஅரசு வங்கிகளை நாட்டுடமையாக்கியது, ஜமீன்தாரி முறையை ஒழித்தது. மன்னர் மானியம் ஒழிப்பைச் செய்தது இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஒரு பொது நோக்கத்தின்பால் ஏற்பட்டவை. இதனால் சமூகம் பயன்பெற்றிருக்கிறது. ஜமீன் ஒழிப்பினால் ஏழை எளிய மக்கள் வயலில் உழுது உழைத்தவர்கள் நில உடைமையாளர் ஆயினர்.

எனவே மக்கள் நலனுக்குச் சட்டங்கள், விதிமுறைகள் உருவாகின்ற போது அதற்குக் குறுக்கே நிற்காது துணை நிற்பது, காலமாறுதலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் நல்ல புத்திசாலித்தனமான அணுகுமுறை. அதனால் ஏற்படும் இழப்புகள் இருந்தால் இழப்பீடுகள் கேட்கலாம். வருமானக் குறைவு ஏற்படுமானால் ஈடுசெய்ய நிதி உதவி வேண்டலாம். தவறில்லை.


பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன்


Saturday, October 20, 2012

ராஜ ராஜ சோழன் அவர்களின் 1027 வது சதய விழாவிற்கு அழைப்பு விடுக்கிறோம்






வணக்கம் தோழர்களே ,

அருண்மொழி வர்மன் என்ற இயற்பெயர் கொண்டு , வன்னியர்களின் உடையார் மற்றும் கண்டிய தேவர் பட்டம் கொண்ட ஸ்ரீ பெரும்பள்ளி க்ஷத்ரிய சிகாமணி ராஜ ராஜ சோழன் அவர்களின் 1027 வது சதய விழாவிற்கு  சோழர் படை வீரர் கூட்டம் படையாட்சிகளின் சார்பாக இந்த வன்னிய குல சத்ரிய இனம் அழைப்பு விடுக்கிறோம் .

......தில்லையில் " சோழர்க்கன்றி சூட்டோம் முடி" என்றுரைத்து இந்நாள் வரை அந்த பெருமையை வன்னியர்களுக்கே அளித்து , சோழர் பரம்பரை என்று உலகுக்கு பறைசாற்றிய அந்த தில்லை நடராஜன் ஆசீர்வாதத்தோடு சதய விழாவிற்கு அழைப்பு விடுக்கிறோம்.




Sunday, October 7, 2012

உடையார்பாளையம் பாளயக்காரர்கள் கோத்திரம்



உடையார்பாளையம் பாளயக்காரர்கள்.

பிரம்ம   வன்னிய ஜாதி,

கங்கானூஜ பார்க்கவ கோத்திரம்.

பல்லவர் கால திருமால் சிலை: விருத்தாசலம் அருகே கண்டெடுப்பு : -- முகாசா பரூர் கச்சிராயர்











பண்ருட்டி: விருத்தாசலம் அருகே 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால திருமால் சிலையும், கச்சிராயர்களின் கல்வெட்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன், நிருபர்களிடம் கூறியதாவது :- கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முகாசா பரூரில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள், ஆய்வில் கண்டறியப்பட்டன. மேலும், சங்க காலத் தொடர்புடைய இவ்வூரில், பல்லவ மன்னர்கள் காலத்தில் திருமால் கோவிலும், சிவன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. காலப்போக்கில் அவை, முற்றிலும் சிதைந்து போயின. வேற்று மதத்தவர் படையெடுப்பில் சிதைக்கப்பட்டுள்ளன.


அவற்றில் பெருமாள், தாயார், கருடாழ்வார், பாய்கலைப்பாவை எனப்படும் கொற்றவை சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. ஆனால், ஒரே ஒரு திருமால் சிலை மட்டும் பின்னமில்லாமல், முழுமையாக, அக்காலத்தில் மறைத்து பாதுகாத்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. 199 செ.மீ உயரமும், 82 செ.மீ அகலமும் கொண்ட இத்திருமால் சிற்பம், காண்பதற்கு அரிய, கலைநுட்பம் மிகுந்த பல்லவர்கால படைப்பு.


கோவில் திருச்சுற்றில் கிடந்த மண்டபத்தூண்கள் சிலவற்றை புரட்டி பார்த்தபோது, கச்சிராயர் சிற்பங்களும், கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டன. 'சாலி வாகன சகாப்தம் 1672 இதற்கு மேல் செல்லா நின்ற பிறமாதூத வருடம் ஐப்பசி மாதம் 27ம் தேதி பருவூரார் ஸ்ரீமுத்து கிருஷ்ணப்ப கச்சிராயர் தாயார் பெரியம்மை அம்மாள் தர்மம்' என்றும், அதன் மேற்புறத்தில் அம்மையின் சிற்பமும், இதே ஆண்டை கூறும் மற்றொரு தூண் கல்வெட்டில் 'பருவூரார் ஸ்ரீபொன்னம்பலக் கச்சிராயர் குமாரர் முத்துகிருஷ்ணப்பக் கச்சிராயர் தர்மம்' என்றும், அதன்கீழ் அவரது சிற்பமும் காணப்படுகிறது.


மேற்கண்ட கல்வெட்டுகளின் ஆண்டு மற்றும் தேதிக்கு, சரியான ஆங்கில ஆண்டு, 1750 நவம்பர் முதல் வாரமாகும். கச்சிராயர் என்பவர்கள், காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரத்தை தலைமையிடமாக கொண்டு அரசாண்ட பல்லவ மன்னர்களின் வழிவந்தவர்கள். பிற்காலத்தில் இவர்கள் சோழர்-பாண்டியர் ஆளுகையின் போது குறுநில மன்னர்களாக இப்பகுதியில் ஆட்சி செய்து, முகமதியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிகளின் போது தன்னாட்சி அதிகாரம் பெற்றிருந்தனர். எனவே, 'முகாசா' பரூர் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது என வரலாறு கூறுகிறது. இக்கோவிலை, கச்சிராயர்களே கட்டியுள்ளனர் என்பதும், இவ்வூரின் பழமையான பெயர் பருவூர் என்றும், ஆய்வின் மூலம் தெரியவருகிறது. இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறினார்.


Source :http://www.dinamalar.com/General_detail.asp?news_id=23354

தேவர், முதலி என்பது பட்டம்


வன்னியர் குலத்தில் பிரிவுகள் அகமுடையான், நத்தமன் பிரிவுகள் உள்ளன. பார்க்கவ கோத்திரமும் வன்னியருக்கு உள்ளது.

உடையார், தேவர் என்பன உயர்வு நிலையை உணர்த்தும் பட்டங்கள். பாண்டியர் காலத்தில்

பரூரை(இன்றைய முகாசா பரூர்) ஆண்ட கச்சிராயர் வன்னிய குலத்தினர் ஆவர்.இக் கச்சிராயர்களில் ஒருவர் ஒரு கல்வெட்டில் "உடையார் தேவர் கச்சிராயர்" எனக் குறிப்பிடப்படுகிறார்.எனவே உடையார் தேவர் என்பது உயர்வான நிலையைக் குறிக்கும் விருதுப் பெயரேயன்றி குலப்பெயரன்று.

பார்கவ குலத்தினருக்கும் வன்னியருக்கும் உள்ள தொடர்பு ஆதாரங்கள் கொண்டது.பார்க்கவ குலத்தினர் திருக்கோவலூரை ஆண்ட தெய்வீக மன்னன் வழி வந்தோர் ஆவர். அம்மன்னன் வழி வந்தவர்களில் வன்னிய குலத்தின் பிரிவுகள் சிலவும் உண்டு.இதை பார்க்கவ குலத்தினரே தெளிவுபடுதியுள்ளனர்.(ஆதாரம் பார்கவ குலத்தினரின் கிருஷ்ணாபுரம் செப்பேடு)

அகமுடையார் அல்லது அகம்படியர் என்பது ஒரு குலமன்று.வேளாளர்கள் அகம்படியராக இருந்துள்ளனர்.கள்ளர்,மறவர் குலத்தில் இருந்து கிளைத்ததுதான் மூன்றாவதான அகம்படியர் இனம்.

அதனால்தான் அகமுடையார் எனக் குறிப்பிடும்போது அகமுடையார்(முதலியார்). அகமுடையார்(தேவர்) என்று ஜாதியை குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்.

முதலியார், முதலி என்பவை குலங்களல்ல. செங்குந்தர், வேளாளர், சேனைத் தலைவர், வன்னியர்,கள்ளர் போன்றோர் முதலி பட்டம் உள்ளவர்கள். கல்வெட்டு மூலமாக தாழ்த்தப்பட்ட இனத்தவர் சிலருக்கும் முதலி பட்டம் இருந்தது தெரியவருகிறது. பறை முதலி என்று குறிப்பிடப்படுவதால் இது உறுதியாகிறது.

Saturday, June 30, 2012

சோழர்களின் வாரிசுகள் பற்றி தினமணி





அண்ணாமலை பல்கலை கழகத்தில் 1995 ஆகஸ்ட் 26, 27 இல் நடைபெற்ற கருத்தரங்கில் சோழ மன்னர்களின் வாரிசுகளை பற்றி பேசப்பட்ட செய்தி 1995 அக்டோபர் ௦08 ஆம் தேதி தினமணியில் வெளியிடப்பட்டது.  






நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/1.html

சோழர்கள் வன்னியர்களே என்று கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த புலவர் திரு. செ.ராசு அவர்கள் எழுதிய கட்டுரை.



            
                    
                

அண்ணாமலை பல்கலை கழகத்தில் 1995 ஆகஸ்ட் 26,27 இல் நடைபெற்ற தமிழ்நாடு வரலாற்று பேரவையின் இரண்டாவது கருத்தரங்கில் புலவர் திரு. செ. ராசு அவர்களால் படிக்கப்பட்ட  இக்கட்டுரை 1999 ஆகஸ்ட் மாத "அச்சமில்லை" இதழில் வெளியிடப்பட்டது.   






நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_7841.html

சோழர் வாரிசு - நூல் வெளியீட்டு விழா செய்தி



                 

நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_18.html

ராஜ ராஜ சோழ மன்னர் வாரிசு பற்றி நக்கீரன்










 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_2153.html

சோழர் வன்னியரே - கனல் மாத இதழ்




http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_9015.html

 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு

சோழர் வாரிசு - தமிழ் ஓசை நாளிதழ்

 

 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_9072.html

ஆண்டியப்ப சூரப்ப சோழனார் பட்டாபிஷேக பிரகடனம் - 1943


 

 

 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு

http://annalpakkangal.blogspot.in/2012/05/1943.html

சிதம்பரநாத சூரப்ப சோழனார் பட்டாபிஷேக பிரகடனம் - 1978

சிதம்பரநாத சூரப்ப சோழனார் பட்டாபிஷேக பிரகடனம் - 1978 

 

 நன்றி : திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கு

http://annalpakkangal.blogspot.in/2012/05/1943.html

Thursday, June 21, 2012

வன்னிய குல சோழர் பரம்பரையினர் பங்கு பெற்ற அச்சமில்லை அச்சமில்லை நிகழ்ச்சி.

வன்னிய குல சோழர் பரம்பரையினர் பங்கு பெற்ற அச்சமில்லை அச்சமில்லை நிகழ்ச்சி.

Chola Descendants - Jaya TV Achamillai Achamillai Program



Monday, June 4, 2012

சன் நியூஸ் தொலைகாட்சியில் சோழர் வாரிசு பற்றி ஒளிப்பரப்பான வீடியோ கோப்பு


தொல்லியல் துறையின் மேனாள் இயக்குனர் திரு. நடன.காசிநாதன் அவர்கள் எழுதி, அண்ணல் வெளியீடு நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்ட "சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு" என்ற நூலின் வெளியீட்டு விழா திருவண்ணாமலை மாவட்டம் போளுரை அடுத்துள்ள திருமலையில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான சமண குகை கோவில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷத்திர அரஹந்த கிரி திகம்பர ஜைன மடத்தில் கடந்த 05.03.2005 இல் நடைபெற்றது. இது பற்றிய செய்தி 06.03.2005 இல் சன் நியூஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது.

Monday, May 21, 2012

கடந்தையார்:

 தகவலை வழங்கிய சொந்தம் திரு .சுவாமி அவர்களுக்கு நன்றி :
சம்புவராயர்,காடவராயர், கச்சிராயர்,வாணகோவரையர், மழவராயர் என்ற பெயர்களில் வன்னியர்கள் சிறு பகுதிகளை சோழர் காலந்தொடங்கி ஆண்டு வந்துள்ளனர்.

வன்னிய குலத்தினருள் கடந்தையார் என்ற பிரிவினர் உள்ளனர்.

இவர்கள் கி.பி. 16 ஆம் நுற்றாண்டில் பெண்ணாடத்தை ஆண்ட பாளையக்காரர்களாக அறியப்படுகின்றனர்.

இரு நூல்களைக் கொண்டு இப்பாளையக்காரர்கள் பற்றியும் அவர்கள் யார் என்பது பற்றியும் அறிய முடிகிறது.

கடந்தையார்களைப் பற்றி ஒரு செப்பேடு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது. தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் 3, பகுதி 1 இல் பக்கம் 1263 இல் இதனை பற்றிய செய்தி உள்ளது.

செப்பேட்டின் மூலம் அறியப்படும் பெண்ணாடம் பாளையக்காரர்கள் :

1.பிரளயங்காத்த கடந்தையார் 2. பொன்னளந்த கடந்தையார் 3.பெரிய நாயக கடந்தையார் 4.ராமநாதக் கடந்தையார்.

இக்கடந்தையார்களின் உறவினராக அறியப்படுபவர்கள் குண்ணத்தூரை ஆண்ட வன்னிய பாளையக்காரர்களான மழவராய நயினார்கள்.

கடந்தையார்களும், குண்ணத்தூர் மழவராயர்களும் உறவின் முறையினராக (பெண் கொண்டு பெண் கொடுப்பவர்களாக) இருந்திருக்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட அந்தச் செப்பேட்டை கி.பி.1512 இல் பெரிய நாயகக் கடந்தையார் வெளியிட்டிருக்கிறார்.

பெண்ணாடம் பகுதியில் வாழ்ந்து வரும் கடந்தையார் பட்டம் கொண்ட வன்னியர்களுக்கு கடந்தை ஈச்சரன் கோயிலில் இன்றும் முதல் மரியாதை செய்யப் பெற்று வருகிறது.

(நன்றி: வன்னியர் - நடன.காசிநாதன்)

------

இந்த கடந்தையார் என்பவர்களின் முந்தைய நிலை என்ன?

பென்ணாகடம், குடிகாடு, திட்டக்குடி,பெரம்பலூர், செந்துறை பகுதிகளில் வாழ்ந்த வன்னியர்களான இக்கடந்தையார்கள் சோழர் காலத்தில் குறுநிலத் தலைவர்களாகவும், பாடி காவல் அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர். இவர்களுக்கு "வங்கார முத்தரையர்" என்ற பட்டம் உண்டு.

சோழர் காலத்தில் ஆட்சியாளர்களாக அறியப்பட்ட வங்கார முத்தரையர் பட்டம் கொண்ட கடந்தையார்கள்:

1. சேந்தன் கூத்தாடுவானான ராஜராஜ வங்கார முத்தரையன் (2 ஆம் ராஜ ராஜ சோழன் காலம்)

2.கடந்தை சேந்தன் ஆதித்தன் ராஜராஜ வங்கார முத்தரையன்.

3.ஆதித்தன் மண்டலியான ராஜாதிராஜ வங்கார முத்தரையன் (சோழன் 2 ஆம் ராஜாதிராஜன் காலம்)

4.பொன்பரப்பினான் வீர வங்கார முத்தரையன் (3 ஆம் குலோத்துங்க சோழன் காலம்)

5.கடந்தை ஆதித்தன் மண்டலியான வங்கார முத்தரையன் ( 3 ஆம் குலோத்துங்க சோழன் காலம்)

6.மண்டலியான ராஜராஜ வங்கார முத்தரையன்.

7.வங்காரமுதரையனான பொன்பரப்பினார் (3 ஆம் ராஜராஜ சோழன் காலம்)

(நன்றி: வரலாற்றில் பெண்ணாகடம்)

Thursday, May 10, 2012

400 வருட பழமை வாய்ந்த குதிரை யானை பரிவார சிலைகள்


தமிழ் நாட்டில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகரை அடுத்து செந்துறைக்கு அருகில் உஞ்சனை பஞ்சாயத்தில் உள்ள் அருள்மிகு பெருவிழியப்பன் ,அருள்மிகு பாவயி அம்மன் ,அருள்மிகு கருப்பண்ண சுவாமி ,அருள்மிகு ஐய்யனார் சுவாமி கோவிலில் உள்ள குதிரை யானை பரிவார சிலைகள் .

இந்த கோவில் சோழர் வழி வந்த வன்னிய குல சத்திரியர்களுக்கு சொந்தம்.

ஆதித்ய சோழன் பள்ளிப்படை



கண்ணப்ப நாயனார் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட புண்ணியத்தலம் காளஹஸ்தி அதன் அருகில் உள்ளது தொண்டைமான் ஆற்றூர் என்ற ஊர். இப்பொழுது ஆந்திர தேசத்தில் இருக்கிறது சோழர்காலத்தில் கட்டிய கோதண்ட ராமேச்வரம் என்னும் ஆதித்தேச்வரர் கோயில் அவ்வூரில் இருக்கிறது. வரலாறு படைத்த ஒரு மிகப்பெரிய சோழப் பேரரசனுடய கோயில் இது. இதன் வரலாறு மிகவும் சுவயானது.
தமிழ்நாட்டின் வடபகுதியை மிகப் பெரும் பேரரசாக 500 ஆண்டுகள் ஆண்டவர்கள் பல்லவர்கள். அந்தப் பல்லவப் பேரரசுக்கு இன்றைக்கு சரியாக 1100 ஆண்டுகளுக்கு முன்னர் முற்றுப்புள்ளி வைத்தவன் அந்த சோழப் பேரரசன். அவனுக்கு ஆதித்த சோழன் என்று பெயர். அவன் ஏறக்குறைய கி.பி. 887ல் பல்லவ அரசன் அபராஜிதன் என்பவனை சண்டையில் வீழ்த்தி தொண்டை நாட்டை அதாவது காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு முதலிய பகுதிகளைக் கைப்பற்றினான். அதனால் அவன் "தொண்டை நாடு பாவிய சோழன்" என்று பட்டம் பூண்டான். அதோடு தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சி முடிந்துவிட்டது. 
 
ஆதித்த சோழன் கொங்கு நாட்டையும் வென்று அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்கு பொன் வேய்ந்தான். சோழ சாம்ராஜ்யத்தை தோற்றிவித்த விஜயாலய சோழனுடைய அருமை மைந்தன் அவன். சிறந்த சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயிலை சிவபெருமானுக்கு எடுத்தவன். அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில் இருக்கின்றன. அவன் காலத்து சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் உன்னதக்கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன் தொண்டைமானாற்றூரில் இறந்து போனான். 
 
அந்த ஆதித்த சோழனுக்கு எடுக்கப்பட்ட சமாதிக கோயில்தான் இது. அக்காலத்தில் சாமாதிக் கோயிலை "பள்ளிப்படை" என்று கூறுவர். அரசர் இறந்தால் அவரை ஈமத்தீயிலோ அல்லது குழியிலோ இடுதலை பள்ளிப் படுத்தல் என்று கூறுவர். ஆதலின் அங்கு எடுத்த கோயிலை பள்ளிப்படை என்பார்கள். ஆதித்த சோழனுடைய சமாதிலிங்கத்தை இக்கோயில் கருப்ப கிருஹத்தில் இன்றும் காண்கிறோம். ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில் உள்ளது. அதிலிருந்து இக்கோயிலைப் பற்றி பல செய்திகளை அறிகிறோம். 
 
ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு இக்கோயிலில் ஏற்பாடு செய்யபட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம் அன்று ஒரு நாள் விழா நடத்த வகை செய்யப்பட்டது. கி.பி. 940ல் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது இந்த கோயில் வாகீஸ்வரபண்டிதர் என்பவரின் பார்வையிலிருந்தது. அவர் ஒரு மகாவிரதி. அவர் தான் இந்த விழா நடத்த 105 கழஞ்சு பொன்னும் 4000 காடி நெல்லும் கொடுத்தார். இதிலிருந்து வரும் வட்டியாக ஆண்டுதோறும் ஆயிரம் காடி நெல் இக்கோயிலுக்கு அளக்கவேண்டும். இதை கொண்டு இந்த ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்கவேண்டும். இந்த ஆயிரம் பேரில் 500 பேர் எல்லா சமயத்தையும் சேர்ந்த அடியார்களாக இருக்கவேண்டும். "பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. பிராமணர் 300 பேரும் மற்ற 200 பேர் தபஸ்விகளாகவும் இருக்கவேண்டும். "தபஸ்விகளில் மகாவிரதிகள் உட்பட ஆறுசமயத்து தபஸ்விகள் இருநூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. ஆறு சமயத்து தபஸ்விகள் என்பது சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளைக் குறிக்கும். இவற்றை அகச் சமயம் ஆறு என நம் பண்டைய நூல்கள் கூறும். சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஆறு சமயம் என்று கல்வெட்டு கூறுவதால் அன்றே இவ்வகைச் சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்று அறிகிறோம்.
இக் கல்வெட்டின் மூலம் மேலும் பல செய்திகள் அறியமுடிகிறது. இவ்விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் முதலியோருக்கு நெல் அளந்தனர். 
 
இவ்வூரில் இந்திர விழா நடத்தப்பட்டது. இங்கு ஒரு கல்விச்சாலையும் இருந்தது. அதற்கு நெல் ஆண்டுதோறும் அளந்தனர். இக்கோயிலில் நாட்டிய அரங்கம் இருந்தது. அதற்கு உடனுக்குடன் வேண்டும்போது பழுது பார்க்க தச்சனுக்கு நெல் கொடுத்தனர். இந்த அரங்கத்தில் இவ்விழாவை ஒட்டி நாட்டிய நாடகங்கள் கூத்துகள் நடத்தப்பட்டன. இங்கு கூத்தாடினார்க்கும் பாடினார்க்கும் நெல் கொடுக்கப்பட்டது. 
 
இந்த தர்மத்தை இக்கோயிலில் இருந்த மகாவிரதிகளும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்களும் காத்துத் தரவேண்டும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் மகாவிரதிகள் கீழ் இருந்தது. இது சமாதிக் கோயில் ஆதலால் மகாவிரதிகள் இங்கு இருந்திருக்கிறார்கள். 
 
சைவ சமயக் கோயில் ஆனாலும் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த 500 பக்தர்களுக்கு திருவிழா ஏழு நாட்களுக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்னும் கட்டளை அன்றைய பரந்த சமய நோக்கை குறிக்கிறதல்லவா?
இப்போழுதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அது கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. இறந்து போனவர்களுக்கு கோயில் கட்டும் வழக்கம் நம் நாட்டில் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பதற்கு இக்கோயிலே சான்று. விமானம் கோபுரம் லிங்கம் நந்தி முதலிய எல்லாம் நிறைந்த பெருங்கோயிலாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் இது வழிபாட்டில் இருக்கிறது. ஏன் தெரியுமா? நம் முன்னோர் இறந்திடில் தெய்வத்தோடு ஒன்றி தெய்வமாகவே நிற்பர் என்பது நமது தத்துவம். நம்பிக்கையும் கூட. இறந்து ஆயிரத்து நூறு ஆண்டுகளாகியும் என்றும் தெய்வமாக இங்கு நிற்கிறான் தமிழகத்தில் வரலாறு படைத்த பெரும் சோழச் சக்கரவர்த்தி. ஆதித்த சோழன் இறந்தும் இறந்திலான்.

சோழர்களின் வாரிசுகள் ( Chola's Descendants )

சோழர்களின் வாரிசுகள் ( Chola's Descendants ) 

 

சோழர்கள் தமிழகத்தின் தொன்மையான மூன்று அரச குடும்பங்களில் ஒருவர். சூரிய குலத்தோர் என்று இடைக் கால இலக்கியங்களிலும், ஞாயிறு குலத்தோர் என்று சங்க இலக்கியங்களாலும் அறியப் பட்டவர்கள். போர்க் களத்தில் தோல்வியே காணாத ஏழு இந்திய அரசர்களில் மூவர் சோழ அரசர்கள்.
விஜயாலயச் சோழனில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 450 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழகத்தை ஆண்ட வம்சம். இந்திய அரசர்களில் முதலும் கடைசியாகவும் வெளிநாட்டின் மீது  படையெடுத்துச் சென்று வென்ற வம்சம்.
இந்த வம்சத்தின் வாரிசுகள் இப்போது இருக்கிறார்களா?
இருந்தால் எங்கு இருக்கிறார்கள்?
பல விதமான சாதி அமைப்புகள் இப்போது சோழர்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். இவர்களில் எந்த இனத்தில் உண்மையாக சோழர்கள் இருக்கிறார்கள்?
அரச இனங்களை ஒரு சாதி அமைப்புக்குள் அடைக்க நினைத்தால் அது சரியாக இருக்குமா?
அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் வம்சம் முடிந்து விட்டதாகக் கூறுகிறார்களே, அது உண்மையா?
அப்படியானால் இப்போது யாரேனும் சோழர்களின் வாரிசுகள் இருந்தால் அவர்கள் சாளுக்கிய சோழர்களாகத்தான் இருக்குமோ?
 சோழர்களின் வாரிசுகள் என நிரூபிப்பதற்கு DNA ஆதாரங்கள் ஏதும் உள்ளதா?
இந்தக் கேள்விகள் வரலாற்றில் ஆர்வமுடைய அனைவருக்குமே இருக்கக் கூடிய கேள்விகள்.
இந்தக் கேள்விகளுக்கான விடை தேடலே இந்தக் கட்டுரை.
உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமெனில், கிடைக்கின்ற ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டுமே தவிர, ஒரு சார்புடையதாய் உணர்ச்சி பூர்வமாக முடிவு எடுக்கக் கூடாது.
முதலில் அரச இனங்களை ஒரு சாதி அமைப்புக்குள் அடைக்க நினைத்தால் அது சரியாக இருக்குமா
அவ்வாறு முயற்சித்தால் அதனால் குழப்பமே மிஞ்சும் என்றக் கூற்று உண்மையா என்றுப் பார்ப்போம்.
தனிப்பட்ட முறையில் சோழர்களை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடைப்பதில் யாருக்கும் உடன்பாடு இருக்காது. அவர்கள் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். அனைத்து சாதியினரும் அவர்களை சொந்தம் கொண்டாடுவது சந்தோஷமான விஷயமே. தஞ்சைப் பெரிய கோயில் கட்டுவதில் ஈடுபடாத தமிழ் சாதியினர் யாராவது உண்டா? தமிழர்களின் மக்கள் தொகை ஒரு கோடியைக் கூடத் தாண்டாத கால கட்டத்தில் ஒன்பது லட்சம் பேர் கொண்ட கட்டுக்கோப்பான வலிமை வாய்ந்த ராஜேந்திர சோழரின் படையில் இடம் பெறாத தமிழ் சாதியினர் யாராவது உண்டா? சோழர்கள் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்றாலும், அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என ஆராய வேண்டுமெனில், இப்போது உள்ள சமூக அமைப்பில் அவர்கள் ஏதேனும் ஒரு சாதி அமைப்புக்குள்ளேயே இருந்தாக வேண்டும்.
எனவே சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்களை ஒவ்வொன்றாய் ஆராய்வோம்.
ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவெனில், இப்போதுள்ள ஜாதி அமைப்பே 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததா என்றால் அது சந்தேகமே. உதாரணமாக தற்போது தஞ்சைக் கள்ளர்கள் மற்றும் வன்னியகுல க்ஷத்ரியாவிலுள்ள பொதுவானக் குடும்பப் பெயர்கள்(மழவரையர், பழுவேட்டரையர், உடையார்,கண்டியத்தேவர்,….).
எனவே குடும்பப் பெயரை வைத்தே இவர்களை அடையாளம் காண இயலும். சோழர்களின் குடும்பப் பெயர் சோழர் என்றுதான் இருக்க வேண்டுமே தவிர தேவர் என்றோ உடையார் என்றோ அல்ல என்ற அடிப்படை விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்கள்:
1. தேவேந்திர குல வேளாளர்
2.
முக்குலத்தோர்
3.முத்தரையர்
4 .
பார்க்கவ குலத்தோர்
5 .
தஞ்சைக் கள்ளர்கள்
6 .
வன்னிய குலச் சத்ரியர்
1 தேவேந்திர குல வேளாளர்:

                                                      
இவர்கள் பள்ளர் அல்லது மள்ளர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வசிப்பது பெரும்பாலும் தென் தமிழகத்தில். தங்களைச் சோழர்கள் என்று அழைப்பதற்கு எந்தத் தனிப்பட்ட ஆதாரமும் இவர்களிடம் இல்லை. பள்ளர் அல்லது மள்ளர் என்றப பட்டத்தை வைத்துக்கொண்டு இவர்கள் சேர,சோழ,பாண்டிய ஆகிய மூன்று வேந்தர்களுக்கும் உரிமை கோருகின்றனர். இவர்களுடைய வாதம் ஆதாரமற்றது, வலுவில்லாதது. 
2 முக்குலத்தோர்:

                                     
முக்குலத்தோர் சோழர்களுக்கு உரிமைக் கோருவது, சோழர்கள் பயன்படுத்திய கூடுதல் பட்டமான தேவர் என்பதை வைத்தும் அவர்களின் கல்வெட்டுக்களில் களவர் என்ற சொல் காணப்படுவதை வைத்தும். ஆனால் தேவர் என்றப் பட்டம் சோழர்களுக்குத் தாய் வழிப் பட்டமாக கண்டியத்தேவர் வம்சத்திலிருந்து வந்தது. இந்தக் கண்டியத்தேவர் பட்டம் தஞ்சைக்கள்ளர் மற்றும் வன்னிய குல சத்ரியாவில் உள்ளது. களவர் என்பது சோழர்களைக் குறிப்பதாகக் கொண்டால், அது களம்(போர்க்களம்) காண்பவர் என்றப் பொதுவானப் பொருளைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் அல்லது தஞ்சைக் கள்ளர்களைக் குறிப்பதாக இருக்க வேண்டும். இவர்கள் காட்டக்கூடிய தேவர் என்றப் பட்டம் தஞ்சைக் கள்ளர்கள் மற்றும் வன்னிய குல சத்ரிய வகுப்பைச் சேர்ந்தப் பட்டப் பெயர் என்பதாலும்,களவர் என்று குறிப்பது களம் காண்பவர் என்றப் பொதுவானப் பொருள் தருவதாகவோ அல்லது தஞ்சைக் கள்ளர்களைக் குறிப்பதாகவோ இருப்பதாலும்,இவர்கள் பெரும்பான்மையாக வசிப்பது தென் தமிழகத்தில் என்பதாலும், சோழர்களுக்கான இவர்களின் உரிமைக் கோரல் வலுவற்றதே.
 
3.முத்தரையர்:
                                இவர்களுடையப் பெயரே போதுமான அளவுக்கு விளக்கம் கொடுத்து விடுகிறது. அரையர் என்றால் சிற்றரசர் அல்லது குறுநில மன்னர்கள் என்று பொருள். இவர்களும் வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் மூவேந்தர்களுக்கும் உரிமைக் கோருகின்றனர். இவர்கள் மூவேந்தர்களின் வாரிசு என்பது உண்மையானால், தங்களை அரையர் என்று அழைத்துக் கொள்வதில் திருப்தி அடைந்துவிடுவார்களா என்பது சந்தேகமே. இவர்கள்  மூவேந்தர்கள் யாருக்காவது உரிமை கோர வேண்டுமென்றால் அது பாண்டியர்களாக இருக்கலாமே தவிர சோழர்கள் அல்ல. 
4 . பார்க்கவ குலத்தோர்:

                                        
ராஜராஜ சோழன் மற்றும் அவருக்குப் பின் வந்த சோழர்கள் பயன் படுத்திய உடையார் என்றப் பட்டம் பார்க்கவ குலத்தைச் சேர்ந்தது என்பதை வைத்து இவர்கள் சோழர்களுக்கு உரிமை கூறுகின்றார்கள். உடையார் என்றப் பட்டம் ராஜராஜனின் தாய் வழிப்பட்டமாகும். ராஜராஜனின் தாயார் மலையமான் வகுப்பைச் சேர்ந்தவர்.  உடையார் என்பது இந்த மலையமான் வகுப்பினரின் ஒருப் பட்டம். தற்போது மலையமான் வகுப்பினர் தஞ்சைக் கள்ளர்கள்,வன்னிய குல க்ஷத்ரியா மற்றும் பார்க்கவ குலம் ஆகிய மூன்று இனங்களிலும் உள்ளனர். எப்படி இருந்தாலும் இதுத் தாய் வழிப் பட்டமே. அவர்கள் சோழர்களுக்குப் பெண் கொடுத்தவர்கள் அவ்வளவே.
5 . தஞ்சைக் கள்ளர்கள்

                                     
கள்ளர்கள் என்றால் கருப்பு நிறத்தவர், போருக்கு முன்பு ஆநிரைக் கவர்வோர், போர்க்களம் புகுவோர்,  திருட்டுத் தொழில் புரிவோர் என்று வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு. தென் தமிழகத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் இனக் கள்ளர்கள் இவை அனைத்தும் தங்களுக்குப் பொருந்தக் கூடியது எனக் கூறுகின்றனர். ஆனால் தஞ்சைக் கள்ளர்கள் தாங்கள் போர்த் தொழில் புரிவோர் என்றப் பிரிவைச் சேர்ந்ததாகக் கூறுகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் பலவகையானப் பட்டங்களைப் பார்க்கும் போது, இதை உண்மையாகக் கருதலாம். முக்குலத்தோர் இவர்களைத் தங்களில் ஒருவராகக் கூறிக் கொண்டாலும் இவர்கள் தங்களைத் தனிப் பிரிவாகவேக் கூறிக் கொள்கின்றனர்.அடிப்படையில் இவர்கள் முக்குலத்தோர் பிரிவில் இருந்து வந்தவர்கள் இல்லை. இவர்களுக்கும் முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தத் தென் தமிழகத்துக் கள்ளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.மரபியல் படியும் இவர்களுக்கும் தென் தமிழகத்து முக்குலத்தோர் இனக் கள்ளர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் மரபியல் படி இவர்களுக்கும் வன்னியர்களுக்கும் தொடர்பு உள்ளது. இவர்கள் முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தவர்களுடன் மண உறவு கொள்வார்களா என்பது சந்தேகமே.ஆனால் இவர்கள் வன்னியர்களுடன் மண உறவுக் கொள்கின்றனர். சோழர்கள் பயன் படுத்திய தேவர்,உடையார் என்றப் பட்டங்களும் இவர்களுக்கு உண்டு. சோழகன் என்றப் பட்டப் பெயரும் இவர்களிடம் இருந்தாலும் சோழகன் என்பது கள்ளரினத்தின் ஒரு காட்டுச் சாதி என்பதால் இவர்களில் சோழ வம்சத்தினரைத் தனித்துப் பார்ப்பது அவசியம். இவர்களிடம் இருக்கும் சோழ அல்லது சோழங்க என்று ஆரம்பிக்கும் மற்றப் பட்டங்கள் சோழ கங்கன், சோழங்க தேவர்சோழங்க நாட்டார், சோழங்க தேவ அம்பலக்காரர் என்பவை. இதில் சோழ கங்கர் என்பது சோழர்கள் கங்க நாட்டை வென்ற பிறகு அந்த நாட்டை ஆண்ட சோழர்களின் பிரதிநிதிக்குக் கொடுக்கப்பட்டப் பட்டம். இவர்கள் சோழர்களின் ரத்த சம்பந்தம் உடையவராகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். சோழங்க தேவர், சோழங்க நாட்டார் என்றப் பட்டமுடையவர்களைப் பார்த்தோமானால், அவர்களுடைய உண்மையானப் பட்டமென்பது தேவர், நாட்டார் என்று இருந்திருக்கக் கூடும். சோழங்க என்றப் பெயர் முன்னால் இணைந்திருப்பதற்கு வேறு காரணம் இருக்கக் கூடும். உதாரணமாக சோழங்க என்பது தாய் வழிப் பட்டம் அல்லது மன்னர்களின் படைவீரர்க்கு மன்னரே அவர்தம் பெயரையே கொடுப்பது போன்று ஏதேனும் ஒரு காரணம் இருக்கலாம். இதே போன்று சோழங்க ஆரச்சி (solangaarachchi )  என்ற சிங்களவருக்கு உள்ளப் பட்டத்தையும் பார்த்தோமானால் இது அச்சு அசலாக சோழங்க நாட்டார் என்பதற்கு இணையான சிங்கள வார்த்தை. ஆரச்சி என்ற சிங்கள வார்த்தைக்கு கிராமத் தலைவர் அல்லது நாட்டார் என்று பொருள். சோழங்கன் என்ற ஊர் இலங்கையில் இருப்பதையும் சோழர்கள் சில சமயங்களில் சிங்கள இளவரசிகளை மணந்தார்கள் என்பதையம் கவனத்தில் கொள்ள வேண்டும். தஞ்சைக் கள்ளர்களின் இருப்பிடம் தஞ்சை என்பதும் இவர்களின் வாதத்திற்கு வலு சேர்க்கிறது. சோழர்களின் குடும்பப் பெயரான சோழன், சோழங்கன்( அங்கன் என்றால் மகன் என்று பொருள்) என்பவை இவர்களிடம் இருப்பதாகக் கூறினாலும் உண்மையில் ஆராயும் போது அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. சிலர் சோழகன் என்பது தான் சோழன் என்றும் சோழ கங்கன் என்பது தான் சோழங்கன் என்றும் கூறுகின்றனர். ஆனால் சோழகன் என்பதற்கும் சோழ கங்கன் என்பதற்கும் உள்ள பொருளை முன்பேப் பார்த்தோம். இருப்பினும் சோழன் அல்லது சோழங்கன் ஆகியப் பட்டங்கள் இவர்களிடம் இல்லை என்பதை நூறு சதவீதம் வரை உறுதிப் படுத்தப் படாத வரை நாம் ஏதும் முடிவெடுக்க இயலாது. இவர்கள் சோழ வம்சத்திற்கு உரிமை கோருவது ஆராயத் தக்கது.

6.வன்னிய குல க்ஷத்ரியர்:
                                                சோழர்கள் பயன் படுத்திய தேவர்,உடையார் என்றப் பட்டங்களுடன் சோழர்களின் குடும்பப் பெயரான சோழனார், சோழங்கனார் போன்றப் பட்டங்கள் இவர்களுக்கு உண்டு. வசிப்பிடம் கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் மற்றும் இதற்கு இடைப்பட்டப் பகுதிகள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் சோழர்களுக்கு வழங்கப்படும் முதல் மரியாதை இப்பொழுதும் பிச்சாவரம் சோழனார்களுக்கு வழங்கப்படுகிறது. சோழர்களில் கடைசியாக ஆட்சி புரிந்தது குலோத்துங்கன் வழி வந்த சாளுக்கிய சோழர்களே. இவர்கள் நேரடிச் சோழர்கள் போன்று சோழனார் பட்டதைப் பயன் படுத்தினாலும், அவர்களைப் போன்று மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் மண உறவுக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மழவரையர், பழுவேட்டரையர் போன்றவர்கள் அவர்களுக்கு சகோதரர்கள் போன்ற முறையாகக் கருதப்படுவார்கள்.பிச்சாவரம் சோழனார்களும் மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் மண உறவுக் கொள்வதில்லை. இவர்களின் மண உறவுப் பெரும்பாலும் உடையார் பாளையம் ஜமீன்களுடனே.  ஆனால் கங்கை கொண்ட சோழ புரத்திற்கு அருகில் வசிக்கும் சோழனார்/சோழங்கனார் என்றப் பட்டமுடையவர்கள் மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் மண உறவு வைத்துள்ளனர். சோழர்களின் கடைசித் தலை நகரம் கங்கை கொண்ட சோழ புரம் என்பதிலிருந்தும், அது கிட்டத்தட்ட 200  ஆண்டுகளாகத் தலை நகராக இருந்ததை வைத்தும் சோழர்களின் இருப்பிடம் இந்தப் பகுதியிலேயே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். எனவே இங்கு வசிக்கும் சோழனார்/சோழங்கனார் என்றப் பட்டமுடையவர்களே நேரடிச் சோழர்களின் வாரிசுகளாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.


சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்கள்
வசிப்பிடம்
சோழர்கள் பயன் படுத்தியப் பட்டங்கள்
சோழர்களின் குடும்பப் பெயர்
சோழர்களுக்கான உரிமை கோரல்
1. தேவேந்திர குல வேளாளர்
தென் தமிழகம்
இல்லை
இல்லை
ஆதாரமற்றது
2.முக்குலத்தோர்
தென் தமிழகம்
தேவர்
இல்லை
வலுவற்றது
3.முத்தரையர்
தஞ்சை
இல்லை
இல்லை
ஆதாரமற்றது
4. பார்க்கவ குலத்தோர்
தஞ்சை
உடையார்
இல்லை
தவறானது
5. தஞ்சைக் கள்ளர்கள்
தஞ்சை
தேவர், உடையார்
சோழகங்கன்
ஆராயத் தக்கது
6. வன்னிய குலச் சத்ரியர்
கங்கை கொண்ட சோழ புரம், சிதம்பரம்
தேவர், உடையார்
சோழனார், சோழங்கனார்
மிக வலுவானது
























அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் வம்சம் முடிந்து விட்டதாகக் கூறுகிறார்களே, அது உண்மையாஎன்பதைப் பார்ப்போம்.
முதலாம் ராஜேந்திர சோழனுக்கு நான்கு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் மன்னராகப் பதவியேற்றுள்ளனர். ஒருவர் மன்னராகப் பதவியேற்பதற்கு முன்பே அவருக்குத் திருமணமாகிக் குழந்தைகள் இருக்கும். அதுவும் அரசர்கள் ஆண் வாரிசுக்காக பல திருமணம் புரிவார்கள். ராஜராஜ சோழனுக்கு மூத்தக் கிளையான உத்தமச் சோழனின் மகன் கண்டராதித்த மதுராந்தகன், இராஜ ராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்துள்ளார். ஆதித்தக் கரிகாலனுக்கு கரிகாலக் கண்ணன் என்ற மகன் இருந்துள்ளதாக ராஜராஜனின் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ராஜேந்திர சோழனுக்கு மதுராந்தகன் என்ற தம்பி இருந்ததாகவும், இவரே கங்கைப் படையெடுப்பைத் தலைமை ஏற்று நடத்தியதாகவும், கங்கை கொண்ட சோழன் மற்றும் சோழ கங்கன் என்பன இவருடையப் பட்டப் பெயர்களே என்றும் ஒரு கருத்து உள்ளது. அதி ராஜேந்திரன் இறந்தவுடன் இந்த அனைத்து நேரடி வாரிசுகளும் அல்லது அவர்களின் சந்ததியும் கூடவே அழிந்து விட்டார்கள் என்று கூற முடியுமா? அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் அவர்களின் வம்சம் முடிந்து விடவில்லை.
அப்படியானால், சோழர்களின் வாரிசுகள் என நிரூபிப்பதற்கு DNA ஆதாரங்கள் ஏதும் உள்ளதா?
நேரடிச் சோழர்களின் DNA மாதிரிக் கிடைத்திருக்குமானால் இவ்வளவு குழப்பங்களே வந்திருக்காது. இருப்பினும் மற்ற கிடைக்கக் கூடிய ஆதாரங்களே ஓரளவுக்குப் போதுமானதாக உள்ளது.
முடிவுரை:

சோழர்களின் குடும்பப் பெயரான சோழன், சோழங்கன் ஆகியப் பட்டங்கள் இப்போதைக்கு வன்னிய குல க்ஷத்ரியாவில் உள்ளது. தஞ்சைக் கள்ளர்களிடம் இந்தப் பட்டம் உள்ளது அல்லது இல்லை என்பதை உறுதிப் படுத்த வேண்டியுள்ளது. அதனைப் பற்றி விபரம் அறிந்தவர்கள் இங்குப் பதிவு செய்யுங்கள். வேறு ஏதேனும் இனங்களிலும் சோழன் அல்லது சோழங்கன் பட்டம் இருந்தாலும் இங்குப் பதிவு செய்யுங்கள்.
நன்றி  : திரு. செம்பியன் 
http://cholanar.blogspot.com/2012/04/cholas-descendants.html