Monday, December 26, 2011

சோழ பரம்பரையைச் சேர்ந்த பிச்சாவரம் ஜமீன்.





சிம்மவர்மன் என்ற இரண்யவர்மன்ஆதித்ய சோழன்குலோத்துங்க சோழன் ஆகிய சோழ மன்னர்களால் தான் நடராஜர் கோயில் கட்டப்பட்டுபராமரிக்கப்பட்டு வந்தது என்பதற்கும்சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் சோழ பரம்பரையைச் சேர்ந்த பிச்சாவரம் ஜமீன் சிதம்பரநாத சூரப்ப சோழகனார் குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில்தான், (98 ஆண்டுகளுக்கு முன்பு வரை) நடராஜர் கோயில் இருந்து வந்ததற்கும்தீட்சிதர்கள் சூழ்ச்சி செய்துசிதம்பரநாத சூரப்ப சோழகனாரின் பாட்டனார் தில்லைக்கண்ணு சூரப்ப சோழகனாரிடமிருந்து கோவிலைப் பறித்துக் கொண்டனர் என்பதற்கும் பல்வேறு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.


http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5493:2009-03-17-13-20-57&catid=278:2009&Itemid=27

வன்னியரே சோழ மன்னர்களின் வாரிசுகள்.



தகவலை வழங்கிய சொந்தம் : திரு.பாலச்சந்திர ராய ராவுத்த மீண்ட நயினார் அவர்கள்.

தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் இரண்டாவது கருத்தரங்கு 1995 ஆகஸ்ட் 26, 27இல் அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், ஆம் சிதம்பரத்தில் தில்லை நடராசர் திருக்கோவில் இருக்கும் ஊரில் நடைபெற்றது.

அப்போது அதாவது 1995லேயே தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய புலவர் செ.இராசு சோழமன்னர்கள் யார்? என்றும் தலைப்பில் கட்டுரை ஒன்று வாசித்தார்.

அந்தக் கட்டுரையில் சோழ மன்னர்களின் வாரிசுகள் சோழமன்னர் மரபில் தோன்றிய சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள பிச்சாவரம் ஜமீன்தார் குடும்பத்தினரே என்று கூறுகிறார். அதற்கு முதலில் அவர் காட்டிய ஆதாரம்: 2.7.1939 அன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம், தேப்பெருமாள் நல்லூரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் வரவேற்புரையாற்றிய வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப்பண்டாரத்தார் அவர்கள், சோழ மன்னர் மரபினர் சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள பிச்சாவரம் ஜமீன்தார் குடும்பத்தினரே என்று கூறினார்.சிதம்பரம் தில்லை நடராசர் கோவில் சோழப் பெருமன்னர்களுக்குக் குலதெய்வம் தில்லை நடராசரே என்று முன்னர் குறிப்பிட்டோம். விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தியில் தன்குல நாயகன் தாண்டவம்பயிலும் தில்லையம்பலம் என்று கூறப்படுகிறது.

இன்று உள்ள பிச்சாவரம் ஜமீன்தார்களுடைய குலதெய்வம் நடராசப் பெருமாளே ஆவார்.
இவ்வாறு சோழ மன்னர்களின் மரபினர் பிச்சாவரம் ஜமீன்தார்களே என்று கூறி புலவர் செ.இராசு காட்டும் ஆதாரம் தஞ்சைச் சோழமன்னர்களின் வாரிசு என்று கூறுவதற்குக் காட்டும் ஆதாரம்.

அண்மைக்காலம்வரை தில்லை நடராசர் கோயில் உரிமை பிச்சாவரம் ஜமீன்தாருக்கே இருந்தது. ஆதலால் தில்லைக் கோயிலின் சாவி நாள் தோறும் ஜமீன்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. அர்த்த சாமப் பூசையின் பின் கோயில் சாவி பல்லக்கில் வைக்கப் பட்டுப் பிச்சாவரம் கொண்டு சென்று அளிக்கப்படும். அதிகாலை மீண்டும் அவ்வாறே வாங்கி வரப்படும்.

பிச்சாவரம் ஜமீன்தார்கள் சோழர் வாரிசு என்பதால், கோவிலைக் கட்டியவர்கள் சோழ மன்னர்கள் என்பதால், அவர்களுக்கு அடங்கிக் கோயிலில் பூஜை செய்து வந்தவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் 5.11.1911இல் 12 தீட்சிதர்கள், தீட்சிதர்களின் சார்பில் பிச்சாவரம் ஜமீன்தாருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பிச்சாவரம் ஜமீன்தாரை மகா.ரா.ரா.ஸ்ரீ சக்கரவர்த்தியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

வலம்புரிச் சங்கால் பஞ்சாக்கரப் படியில் அமரச் செய்து முடி சூட்டினர் என்பதைப்பின் வரும் பாட்டு உறுதிப்படுத்துகிறது.

அலகில் மற்றெவரும் அணுகுவதற்கு அரிய பற்சக்கரத்திருப்படி மிசை அமர்த்தி
அஞ்சேல் என நடம் ஆடும் இறைவன்முன் வலம்புரிச்சங்கால் கங்கை நீர் பெய்து நலம் பெறத் திருஅபிடேகம் செய்தபின் தேவரும் முனிவரும் திருவுளங்களிய
பூமகள் இங்கு பொன் மணி மண்டபத்து அரியாசனத்தில் அரசனை அமர்த்தி
பரிவுடன் துதித்துப் பரமனை வணங்கி முடிதலை முனிவர் திருக்கரத்து ஏந்திச் சூடினர் வாழ்த்திச் சோழனார் தமக்கே

பிச்சாவரம் ஜமீன்தார்கள் பட்டா பிஷேகத்தை ஒட்டிப் பட்டாபிஷேகப் பிரகடனம் என்ற பெயரில் வெளியிடும் அறிவிப்பிலே,

ஆதியிலே கௌட தேசாதி பனுடைய மூத்த குமாரனாகிய இரணிய வர்வச் சக்கரவர்த்தி என்னும் காரணப் பெயர் பூண்ட சிம்மவர்மச் சோழனால் பதஞ்சலி, வியாக்கிரபாதர்கள் ஆக்ஞைப் படி தில்லைக் காட்டைத் திருத்தி தேவாலயமாகப் பிரதிஷ்டை செய்யப் பெற்று ஸ்ரீ சிதம்பரம் நடராசப் பெரு மாள் சந்நிதியிலே தில்லை மூவாயிர முனிவர்கள் திருமுன்னே ஸ்ரீபஞ்சாக்கரப் படியின் மீதே மேற்படி சோழ வம்சத்தினருக்குத் தொன்று தொட்டு பட்டாபிஷேகம் நடந்து வந்த சம்பிராதாயப்படி அச்சோழ வம்சவழி வந்த பிச்சாவரம் ஜமீன்தார்.

எனும் அந்தப் பா தொடங்குகிறது முடிவுரையாகப் புலவர் இராசு இவ்வாறு முடிக்கையிலும் சோழருக்கு அன்றி முடி சூடாத்தில்லை மூவாயி ரவர் பிச்சாவரம் ஜமீன்தாருக்கு முடிசூட்டுவதாலும், அப்போது புலிக் கொடி அளித்தலினாலும், வளவன் என்ற பெயர் உள்ளமையாலும், தில்லை நிருவாகம் பெற்றிருந்த காரணத் தாலும் தில்லை நடராசரைக் குல தெய்வமாகக் கொண்ட காரணத் தாலும், தில்லைக் கோயில் சாவியை வைத்திருந்த உரிமையாலும், தில்லை தீட்சிதர்கள் கட்டுப்பட்டிருந்தமை யாலும், சோழனார் என்ற பெயர் பெற்றிருப்பதாலும் பிச்சாவரம் ஜமீன்தார் மரபினரே சோழர் மரபினர் என்பது உறுதியாகிறது.

சோழ மண்டகப் படி செய்யும் உரிமை பெற்ற வன்னியக்குல க்ஷத்ரிய குடும்பம்




தமிழகத்தில் வாழும் சோழ மன்னர்களின் வாரிசுகளின் புகைப்படங்கள் :



சோழ மன்னர்கள் வன்னிய வம்சத்தவர் என்பதற்க்கு இதுவே சிறந்த சான்று. தங்களை சோழர் வழிவந்தோர் என்று யார் வேண்டும் என்றாலும் கூறி கொள்ளலாம். ஆனால் நடைமுறை ஆதாரம் வேண்டும். உண்மையான சோழர் குல வாரிசுகள் உயிரோடு இருக்க...மாற்று குலத்தார் தங்களை சோழர் என்று அழைத்து கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.


சோழர்களின் குல தெய்வமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் சோழ மண்டக படி உற்சவத்தை நடத்தும் உரிமையை பெற்றவர்கள் வன்னியக்குலத்தவரான பிச்சாவரம் சோழனார் மட்டுமே. வேறு எந்த சாதியினருக்கும் இந்த உரிமை இல்லை.


சோழர்கள் மட்டுமே முடி சூட்டப்படும் சோழர்களின் குல தெய்வமான தில்லை நடராஜர் ஆலயத்தில் தில்லை வாழ் அந்தணர்இம்மரபினருக்கு முடிசூட்டுவார்.அவ்வாறு பிச்சாவரம் மன்னர் மஹாராஜா ராஜா ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார்அவர்கள் சோழராக முடி சூட்டப்பட்டு.. புலி கொடி கொடுத்து சோழராக பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு தில்லை அந்தணர்களுடணும் பொது மக்களுடணும் காட்சி தரும் அரிய புகைப்படம்.


மஹாராஜா ராஜா ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார்


மஹாராஜா ராஜா ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார்

வன்னிய குல சோழ மன்னர்களுக்கு முடி சூட்டும் பொது எடுத்த புகைப்படங்கள்