Sunday, September 29, 2013

கி.பி.7 ஆம் நூற்றாண்டு தருமபுரி கல்வெட்டு

10 ஆம் நூற்றாண்டென்ன அதற்கு முன்னரே பள்ளி இனத்தவர் இருந்தனர்.

ஆதாரம்: தருமபுரி மாவட்டம் பலிஞ்சரஹள்ளி எனும் ஊரில் உள்ள நடுகல் கூறும் செய்தி.இதன் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு.மஹேந்திரவர்ம பல்லவர் காலத்தியது.

"கோவிசைய மயீந்திர பருமற்கு

யாண்டைந்தாவது காடந்தைகள்
சேவகன் புதுப்பள்ளிகளோடு பொருத
ஞான்று பட்டா நெருமேதிகாரி"

(தருமபுரி கல்வெட்டுக்கள், தொகுதி 2, எண். 1973/26)

காடந்தைகள் என்பாருக்கும், புதுப்பள்ளிகளுக்கும் நடைபெற்ற போரில் எருமைநாட்டு அதிகாரி ஒருவன் மாண்டான் என்பதே செய்தி.

இதன் மூலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டளவிலேயே பள்ளி இனத்தவர் இருந்தனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.