Thursday, May 10, 2012

சோழர்களின் வாரிசுகள் ( Chola's Descendants )

சோழர்களின் வாரிசுகள் ( Chola's Descendants ) 

 

சோழர்கள் தமிழகத்தின் தொன்மையான மூன்று அரச குடும்பங்களில் ஒருவர். சூரிய குலத்தோர் என்று இடைக் கால இலக்கியங்களிலும், ஞாயிறு குலத்தோர் என்று சங்க இலக்கியங்களாலும் அறியப் பட்டவர்கள். போர்க் களத்தில் தோல்வியே காணாத ஏழு இந்திய அரசர்களில் மூவர் சோழ அரசர்கள்.
விஜயாலயச் சோழனில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 450 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழகத்தை ஆண்ட வம்சம். இந்திய அரசர்களில் முதலும் கடைசியாகவும் வெளிநாட்டின் மீது  படையெடுத்துச் சென்று வென்ற வம்சம்.
இந்த வம்சத்தின் வாரிசுகள் இப்போது இருக்கிறார்களா?
இருந்தால் எங்கு இருக்கிறார்கள்?
பல விதமான சாதி அமைப்புகள் இப்போது சோழர்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். இவர்களில் எந்த இனத்தில் உண்மையாக சோழர்கள் இருக்கிறார்கள்?
அரச இனங்களை ஒரு சாதி அமைப்புக்குள் அடைக்க நினைத்தால் அது சரியாக இருக்குமா?
அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் வம்சம் முடிந்து விட்டதாகக் கூறுகிறார்களே, அது உண்மையா?
அப்படியானால் இப்போது யாரேனும் சோழர்களின் வாரிசுகள் இருந்தால் அவர்கள் சாளுக்கிய சோழர்களாகத்தான் இருக்குமோ?
 சோழர்களின் வாரிசுகள் என நிரூபிப்பதற்கு DNA ஆதாரங்கள் ஏதும் உள்ளதா?
இந்தக் கேள்விகள் வரலாற்றில் ஆர்வமுடைய அனைவருக்குமே இருக்கக் கூடிய கேள்விகள்.
இந்தக் கேள்விகளுக்கான விடை தேடலே இந்தக் கட்டுரை.
உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமெனில், கிடைக்கின்ற ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டுமே தவிர, ஒரு சார்புடையதாய் உணர்ச்சி பூர்வமாக முடிவு எடுக்கக் கூடாது.
முதலில் அரச இனங்களை ஒரு சாதி அமைப்புக்குள் அடைக்க நினைத்தால் அது சரியாக இருக்குமா
அவ்வாறு முயற்சித்தால் அதனால் குழப்பமே மிஞ்சும் என்றக் கூற்று உண்மையா என்றுப் பார்ப்போம்.
தனிப்பட்ட முறையில் சோழர்களை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடைப்பதில் யாருக்கும் உடன்பாடு இருக்காது. அவர்கள் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். அனைத்து சாதியினரும் அவர்களை சொந்தம் கொண்டாடுவது சந்தோஷமான விஷயமே. தஞ்சைப் பெரிய கோயில் கட்டுவதில் ஈடுபடாத தமிழ் சாதியினர் யாராவது உண்டா? தமிழர்களின் மக்கள் தொகை ஒரு கோடியைக் கூடத் தாண்டாத கால கட்டத்தில் ஒன்பது லட்சம் பேர் கொண்ட கட்டுக்கோப்பான வலிமை வாய்ந்த ராஜேந்திர சோழரின் படையில் இடம் பெறாத தமிழ் சாதியினர் யாராவது உண்டா? சோழர்கள் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்றாலும், அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என ஆராய வேண்டுமெனில், இப்போது உள்ள சமூக அமைப்பில் அவர்கள் ஏதேனும் ஒரு சாதி அமைப்புக்குள்ளேயே இருந்தாக வேண்டும்.
எனவே சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்களை ஒவ்வொன்றாய் ஆராய்வோம்.
ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவெனில், இப்போதுள்ள ஜாதி அமைப்பே 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததா என்றால் அது சந்தேகமே. உதாரணமாக தற்போது தஞ்சைக் கள்ளர்கள் மற்றும் வன்னியகுல க்ஷத்ரியாவிலுள்ள பொதுவானக் குடும்பப் பெயர்கள்(மழவரையர், பழுவேட்டரையர், உடையார்,கண்டியத்தேவர்,….).
எனவே குடும்பப் பெயரை வைத்தே இவர்களை அடையாளம் காண இயலும். சோழர்களின் குடும்பப் பெயர் சோழர் என்றுதான் இருக்க வேண்டுமே தவிர தேவர் என்றோ உடையார் என்றோ அல்ல என்ற அடிப்படை விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்கள்:
1. தேவேந்திர குல வேளாளர்
2.
முக்குலத்தோர்
3.முத்தரையர்
4 .
பார்க்கவ குலத்தோர்
5 .
தஞ்சைக் கள்ளர்கள்
6 .
வன்னிய குலச் சத்ரியர்
1 தேவேந்திர குல வேளாளர்:

                                                      
இவர்கள் பள்ளர் அல்லது மள்ளர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வசிப்பது பெரும்பாலும் தென் தமிழகத்தில். தங்களைச் சோழர்கள் என்று அழைப்பதற்கு எந்தத் தனிப்பட்ட ஆதாரமும் இவர்களிடம் இல்லை. பள்ளர் அல்லது மள்ளர் என்றப பட்டத்தை வைத்துக்கொண்டு இவர்கள் சேர,சோழ,பாண்டிய ஆகிய மூன்று வேந்தர்களுக்கும் உரிமை கோருகின்றனர். இவர்களுடைய வாதம் ஆதாரமற்றது, வலுவில்லாதது. 
2 முக்குலத்தோர்:

                                     
முக்குலத்தோர் சோழர்களுக்கு உரிமைக் கோருவது, சோழர்கள் பயன்படுத்திய கூடுதல் பட்டமான தேவர் என்பதை வைத்தும் அவர்களின் கல்வெட்டுக்களில் களவர் என்ற சொல் காணப்படுவதை வைத்தும். ஆனால் தேவர் என்றப் பட்டம் சோழர்களுக்குத் தாய் வழிப் பட்டமாக கண்டியத்தேவர் வம்சத்திலிருந்து வந்தது. இந்தக் கண்டியத்தேவர் பட்டம் தஞ்சைக்கள்ளர் மற்றும் வன்னிய குல சத்ரியாவில் உள்ளது. களவர் என்பது சோழர்களைக் குறிப்பதாகக் கொண்டால், அது களம்(போர்க்களம்) காண்பவர் என்றப் பொதுவானப் பொருளைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் அல்லது தஞ்சைக் கள்ளர்களைக் குறிப்பதாக இருக்க வேண்டும். இவர்கள் காட்டக்கூடிய தேவர் என்றப் பட்டம் தஞ்சைக் கள்ளர்கள் மற்றும் வன்னிய குல சத்ரிய வகுப்பைச் சேர்ந்தப் பட்டப் பெயர் என்பதாலும்,களவர் என்று குறிப்பது களம் காண்பவர் என்றப் பொதுவானப் பொருள் தருவதாகவோ அல்லது தஞ்சைக் கள்ளர்களைக் குறிப்பதாகவோ இருப்பதாலும்,இவர்கள் பெரும்பான்மையாக வசிப்பது தென் தமிழகத்தில் என்பதாலும், சோழர்களுக்கான இவர்களின் உரிமைக் கோரல் வலுவற்றதே.
 
3.முத்தரையர்:
                                இவர்களுடையப் பெயரே போதுமான அளவுக்கு விளக்கம் கொடுத்து விடுகிறது. அரையர் என்றால் சிற்றரசர் அல்லது குறுநில மன்னர்கள் என்று பொருள். இவர்களும் வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் மூவேந்தர்களுக்கும் உரிமைக் கோருகின்றனர். இவர்கள் மூவேந்தர்களின் வாரிசு என்பது உண்மையானால், தங்களை அரையர் என்று அழைத்துக் கொள்வதில் திருப்தி அடைந்துவிடுவார்களா என்பது சந்தேகமே. இவர்கள்  மூவேந்தர்கள் யாருக்காவது உரிமை கோர வேண்டுமென்றால் அது பாண்டியர்களாக இருக்கலாமே தவிர சோழர்கள் அல்ல. 
4 . பார்க்கவ குலத்தோர்:

                                        
ராஜராஜ சோழன் மற்றும் அவருக்குப் பின் வந்த சோழர்கள் பயன் படுத்திய உடையார் என்றப் பட்டம் பார்க்கவ குலத்தைச் சேர்ந்தது என்பதை வைத்து இவர்கள் சோழர்களுக்கு உரிமை கூறுகின்றார்கள். உடையார் என்றப் பட்டம் ராஜராஜனின் தாய் வழிப்பட்டமாகும். ராஜராஜனின் தாயார் மலையமான் வகுப்பைச் சேர்ந்தவர்.  உடையார் என்பது இந்த மலையமான் வகுப்பினரின் ஒருப் பட்டம். தற்போது மலையமான் வகுப்பினர் தஞ்சைக் கள்ளர்கள்,வன்னிய குல க்ஷத்ரியா மற்றும் பார்க்கவ குலம் ஆகிய மூன்று இனங்களிலும் உள்ளனர். எப்படி இருந்தாலும் இதுத் தாய் வழிப் பட்டமே. அவர்கள் சோழர்களுக்குப் பெண் கொடுத்தவர்கள் அவ்வளவே.
5 . தஞ்சைக் கள்ளர்கள்

                                     
கள்ளர்கள் என்றால் கருப்பு நிறத்தவர், போருக்கு முன்பு ஆநிரைக் கவர்வோர், போர்க்களம் புகுவோர்,  திருட்டுத் தொழில் புரிவோர் என்று வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு. தென் தமிழகத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் இனக் கள்ளர்கள் இவை அனைத்தும் தங்களுக்குப் பொருந்தக் கூடியது எனக் கூறுகின்றனர். ஆனால் தஞ்சைக் கள்ளர்கள் தாங்கள் போர்த் தொழில் புரிவோர் என்றப் பிரிவைச் சேர்ந்ததாகக் கூறுகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் பலவகையானப் பட்டங்களைப் பார்க்கும் போது, இதை உண்மையாகக் கருதலாம். முக்குலத்தோர் இவர்களைத் தங்களில் ஒருவராகக் கூறிக் கொண்டாலும் இவர்கள் தங்களைத் தனிப் பிரிவாகவேக் கூறிக் கொள்கின்றனர்.அடிப்படையில் இவர்கள் முக்குலத்தோர் பிரிவில் இருந்து வந்தவர்கள் இல்லை. இவர்களுக்கும் முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தத் தென் தமிழகத்துக் கள்ளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.மரபியல் படியும் இவர்களுக்கும் தென் தமிழகத்து முக்குலத்தோர் இனக் கள்ளர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் மரபியல் படி இவர்களுக்கும் வன்னியர்களுக்கும் தொடர்பு உள்ளது. இவர்கள் முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தவர்களுடன் மண உறவு கொள்வார்களா என்பது சந்தேகமே.ஆனால் இவர்கள் வன்னியர்களுடன் மண உறவுக் கொள்கின்றனர். சோழர்கள் பயன் படுத்திய தேவர்,உடையார் என்றப் பட்டங்களும் இவர்களுக்கு உண்டு. சோழகன் என்றப் பட்டப் பெயரும் இவர்களிடம் இருந்தாலும் சோழகன் என்பது கள்ளரினத்தின் ஒரு காட்டுச் சாதி என்பதால் இவர்களில் சோழ வம்சத்தினரைத் தனித்துப் பார்ப்பது அவசியம். இவர்களிடம் இருக்கும் சோழ அல்லது சோழங்க என்று ஆரம்பிக்கும் மற்றப் பட்டங்கள் சோழ கங்கன், சோழங்க தேவர்சோழங்க நாட்டார், சோழங்க தேவ அம்பலக்காரர் என்பவை. இதில் சோழ கங்கர் என்பது சோழர்கள் கங்க நாட்டை வென்ற பிறகு அந்த நாட்டை ஆண்ட சோழர்களின் பிரதிநிதிக்குக் கொடுக்கப்பட்டப் பட்டம். இவர்கள் சோழர்களின் ரத்த சம்பந்தம் உடையவராகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். சோழங்க தேவர், சோழங்க நாட்டார் என்றப் பட்டமுடையவர்களைப் பார்த்தோமானால், அவர்களுடைய உண்மையானப் பட்டமென்பது தேவர், நாட்டார் என்று இருந்திருக்கக் கூடும். சோழங்க என்றப் பெயர் முன்னால் இணைந்திருப்பதற்கு வேறு காரணம் இருக்கக் கூடும். உதாரணமாக சோழங்க என்பது தாய் வழிப் பட்டம் அல்லது மன்னர்களின் படைவீரர்க்கு மன்னரே அவர்தம் பெயரையே கொடுப்பது போன்று ஏதேனும் ஒரு காரணம் இருக்கலாம். இதே போன்று சோழங்க ஆரச்சி (solangaarachchi )  என்ற சிங்களவருக்கு உள்ளப் பட்டத்தையும் பார்த்தோமானால் இது அச்சு அசலாக சோழங்க நாட்டார் என்பதற்கு இணையான சிங்கள வார்த்தை. ஆரச்சி என்ற சிங்கள வார்த்தைக்கு கிராமத் தலைவர் அல்லது நாட்டார் என்று பொருள். சோழங்கன் என்ற ஊர் இலங்கையில் இருப்பதையும் சோழர்கள் சில சமயங்களில் சிங்கள இளவரசிகளை மணந்தார்கள் என்பதையம் கவனத்தில் கொள்ள வேண்டும். தஞ்சைக் கள்ளர்களின் இருப்பிடம் தஞ்சை என்பதும் இவர்களின் வாதத்திற்கு வலு சேர்க்கிறது. சோழர்களின் குடும்பப் பெயரான சோழன், சோழங்கன்( அங்கன் என்றால் மகன் என்று பொருள்) என்பவை இவர்களிடம் இருப்பதாகக் கூறினாலும் உண்மையில் ஆராயும் போது அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. சிலர் சோழகன் என்பது தான் சோழன் என்றும் சோழ கங்கன் என்பது தான் சோழங்கன் என்றும் கூறுகின்றனர். ஆனால் சோழகன் என்பதற்கும் சோழ கங்கன் என்பதற்கும் உள்ள பொருளை முன்பேப் பார்த்தோம். இருப்பினும் சோழன் அல்லது சோழங்கன் ஆகியப் பட்டங்கள் இவர்களிடம் இல்லை என்பதை நூறு சதவீதம் வரை உறுதிப் படுத்தப் படாத வரை நாம் ஏதும் முடிவெடுக்க இயலாது. இவர்கள் சோழ வம்சத்திற்கு உரிமை கோருவது ஆராயத் தக்கது.

6.வன்னிய குல க்ஷத்ரியர்:
                                                சோழர்கள் பயன் படுத்திய தேவர்,உடையார் என்றப் பட்டங்களுடன் சோழர்களின் குடும்பப் பெயரான சோழனார், சோழங்கனார் போன்றப் பட்டங்கள் இவர்களுக்கு உண்டு. வசிப்பிடம் கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் மற்றும் இதற்கு இடைப்பட்டப் பகுதிகள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் சோழர்களுக்கு வழங்கப்படும் முதல் மரியாதை இப்பொழுதும் பிச்சாவரம் சோழனார்களுக்கு வழங்கப்படுகிறது. சோழர்களில் கடைசியாக ஆட்சி புரிந்தது குலோத்துங்கன் வழி வந்த சாளுக்கிய சோழர்களே. இவர்கள் நேரடிச் சோழர்கள் போன்று சோழனார் பட்டதைப் பயன் படுத்தினாலும், அவர்களைப் போன்று மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் மண உறவுக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மழவரையர், பழுவேட்டரையர் போன்றவர்கள் அவர்களுக்கு சகோதரர்கள் போன்ற முறையாகக் கருதப்படுவார்கள்.பிச்சாவரம் சோழனார்களும் மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் மண உறவுக் கொள்வதில்லை. இவர்களின் மண உறவுப் பெரும்பாலும் உடையார் பாளையம் ஜமீன்களுடனே.  ஆனால் கங்கை கொண்ட சோழ புரத்திற்கு அருகில் வசிக்கும் சோழனார்/சோழங்கனார் என்றப் பட்டமுடையவர்கள் மழவரையர் மற்றும் பழுவேட்டரையர்களுடன் மண உறவு வைத்துள்ளனர். சோழர்களின் கடைசித் தலை நகரம் கங்கை கொண்ட சோழ புரம் என்பதிலிருந்தும், அது கிட்டத்தட்ட 200  ஆண்டுகளாகத் தலை நகராக இருந்ததை வைத்தும் சோழர்களின் இருப்பிடம் இந்தப் பகுதியிலேயே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். எனவே இங்கு வசிக்கும் சோழனார்/சோழங்கனார் என்றப் பட்டமுடையவர்களே நேரடிச் சோழர்களின் வாரிசுகளாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.


சோழர்களுக்கு உரிமை கோரும் இனங்கள்
வசிப்பிடம்
சோழர்கள் பயன் படுத்தியப் பட்டங்கள்
சோழர்களின் குடும்பப் பெயர்
சோழர்களுக்கான உரிமை கோரல்
1. தேவேந்திர குல வேளாளர்
தென் தமிழகம்
இல்லை
இல்லை
ஆதாரமற்றது
2.முக்குலத்தோர்
தென் தமிழகம்
தேவர்
இல்லை
வலுவற்றது
3.முத்தரையர்
தஞ்சை
இல்லை
இல்லை
ஆதாரமற்றது
4. பார்க்கவ குலத்தோர்
தஞ்சை
உடையார்
இல்லை
தவறானது
5. தஞ்சைக் கள்ளர்கள்
தஞ்சை
தேவர், உடையார்
சோழகங்கன்
ஆராயத் தக்கது
6. வன்னிய குலச் சத்ரியர்
கங்கை கொண்ட சோழ புரம், சிதம்பரம்
தேவர், உடையார்
சோழனார், சோழங்கனார்
மிக வலுவானது
























அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் வம்சம் முடிந்து விட்டதாகக் கூறுகிறார்களே, அது உண்மையாஎன்பதைப் பார்ப்போம்.
முதலாம் ராஜேந்திர சோழனுக்கு நான்கு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் மன்னராகப் பதவியேற்றுள்ளனர். ஒருவர் மன்னராகப் பதவியேற்பதற்கு முன்பே அவருக்குத் திருமணமாகிக் குழந்தைகள் இருக்கும். அதுவும் அரசர்கள் ஆண் வாரிசுக்காக பல திருமணம் புரிவார்கள். ராஜராஜ சோழனுக்கு மூத்தக் கிளையான உத்தமச் சோழனின் மகன் கண்டராதித்த மதுராந்தகன், இராஜ ராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்துள்ளார். ஆதித்தக் கரிகாலனுக்கு கரிகாலக் கண்ணன் என்ற மகன் இருந்துள்ளதாக ராஜராஜனின் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ராஜேந்திர சோழனுக்கு மதுராந்தகன் என்ற தம்பி இருந்ததாகவும், இவரே கங்கைப் படையெடுப்பைத் தலைமை ஏற்று நடத்தியதாகவும், கங்கை கொண்ட சோழன் மற்றும் சோழ கங்கன் என்பன இவருடையப் பட்டப் பெயர்களே என்றும் ஒரு கருத்து உள்ளது. அதி ராஜேந்திரன் இறந்தவுடன் இந்த அனைத்து நேரடி வாரிசுகளும் அல்லது அவர்களின் சந்ததியும் கூடவே அழிந்து விட்டார்கள் என்று கூற முடியுமா? அதி ராஜேந்திரனுடன் நேரடிச் சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் அவர்களின் வம்சம் முடிந்து விடவில்லை.
அப்படியானால், சோழர்களின் வாரிசுகள் என நிரூபிப்பதற்கு DNA ஆதாரங்கள் ஏதும் உள்ளதா?
நேரடிச் சோழர்களின் DNA மாதிரிக் கிடைத்திருக்குமானால் இவ்வளவு குழப்பங்களே வந்திருக்காது. இருப்பினும் மற்ற கிடைக்கக் கூடிய ஆதாரங்களே ஓரளவுக்குப் போதுமானதாக உள்ளது.
முடிவுரை:

சோழர்களின் குடும்பப் பெயரான சோழன், சோழங்கன் ஆகியப் பட்டங்கள் இப்போதைக்கு வன்னிய குல க்ஷத்ரியாவில் உள்ளது. தஞ்சைக் கள்ளர்களிடம் இந்தப் பட்டம் உள்ளது அல்லது இல்லை என்பதை உறுதிப் படுத்த வேண்டியுள்ளது. அதனைப் பற்றி விபரம் அறிந்தவர்கள் இங்குப் பதிவு செய்யுங்கள். வேறு ஏதேனும் இனங்களிலும் சோழன் அல்லது சோழங்கன் பட்டம் இருந்தாலும் இங்குப் பதிவு செய்யுங்கள்.
நன்றி  : திரு. செம்பியன் 
http://cholanar.blogspot.com/2012/04/cholas-descendants.html