கம்பனுக்கு கைகொடுத்து காவிரிக்கு அணை எடுத்து !
செம்பொன்னால் சிதம்பரத்து சாமிக்கொரு கூரை காத்து !
புஞ்சையில நஞ்சையில புகழ் விளையும் தஞ்சையில புலி கொடிய ஏத்தி வச்சி புகழ் கொடிய பறக்க விட்டு !
ஈழநாட்டு எல்லை வர எசையோடு ஆண்டு வந்த சோழநாட்டு மன்னருங்க சந்ததியில் வந்தவரே !
அண்ணாமலை
பல்கலை கழகத்தில் 1995 ஆகஸ்ட் 26, 27 இல் நடைபெற்ற கருத்தரங்கில் சோழ
மன்னர்களின் வாரிசுகளை பற்றி பேசப்பட்ட செய்தி 1995 அக்டோபர் ௦08 ஆம் தேதி
தினமணியில் வெளியிடப்பட்டது.
அண்ணாமலை
பல்கலை கழகத்தில் 1995 ஆகஸ்ட் 26,27 இல் நடைபெற்ற தமிழ்நாடு வரலாற்று
பேரவையின் இரண்டாவது கருத்தரங்கில் புலவர் திரு. செ. ராசு அவர்களால்
படிக்கப்பட்ட இக்கட்டுரை 1999 ஆகஸ்ட் மாத "அச்சமில்லை" இதழில் வெளியிடப்பட்டது.
தொல்லியல் துறையின் மேனாள் இயக்குனர் திரு. நடன.காசிநாதன் அவர்கள் எழுதி,
அண்ணல் வெளியீடு நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்ட "சோழ வேந்தர் பரம்பரை
வன்னிய பாளையக்காரர் வரலாறு" என்ற நூலின் வெளியீட்டு விழா திருவண்ணாமலை
மாவட்டம் போளுரை அடுத்துள்ள திருமலையில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான சமண
குகை கோவில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷத்திர அரஹந்த கிரி திகம்பர ஜைன மடத்தில்
கடந்த 05.03.2005 இல் நடைபெற்றது. இது பற்றிய செய்தி 06.03.2005 இல் சன்
நியூஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது.